வரலாற்றில் இல்லாத அளவுக்கு எரிபொருள் விலையை உயர்த்த  அரசாங்கம் தயார்: சஜித்

Prathees
4 years ago
வரலாற்றில் இல்லாத அளவுக்கு எரிபொருள் விலையை உயர்த்த  அரசாங்கம் தயார்: சஜித்

அண்மையில் இலங்கைக்கு டீசல் எரிபொருள் தாங்கி வந்துள்ளதாகவும் அமைச்சர்கள், வைபவமொன்றை ஏறபாடு செய்து  கடனுக்கு கிடைக்கப்பெற்ற  டீசல் எரிபொருள் கப்பலை வரவேற்றதாக  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இவ்விழா வழமையாக விசேட நோக்கத்திற்காகவே நடத்தப்படுவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மகாவலி அபிவிருத்தி இயக்கம், 200 ஆடைத்தொழிற்சாலைகள் வேலைத்திட்டம், சிறுவர்களுக்கான சீருடை விநியோகம் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்ற போதிலும், கடனுக்கு  வாங்கிய டீசல் கப்பலை வரவேற்கும் விழா முதன்முறையாக நடைபெற்றதாக அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் இந்தியாவின் கடன் உதவியின் கீழ் வீட்டுத்திட்டத்தை திறந்துவைக்க பிரதமர் மோடி இலங்கை வந்தபோது, ​​இன்று கறுப்புக்கொடி ஏற்றச் சொன்ன அதே அமைச்சர்கள்,  கடனுக்கு பெற்ற எண்ணெய் கப்பலை ஏற்கப் போவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

இன்னும் சில தினங்களில் எரிபொருள் விலை மீண்டும் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்

 இது வரலாற்றில் இல்லாத அதிகபட்ச எண்ணெய் விலை உயர்வாக இருக்கலாம் என்றார்.

கல்முனை வைத்தியசாலைக்கு 2,990,000 ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழங்கி வைத்து உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4