பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய innovator வீசா - ஹோல்டன் விசாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்
பிரித்தானியாவில் முதலீட்டார்களுக்கு வழங்கப்படும் கோல்டன் விசா பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகின்றதாக உள்துறை விவகார செயலர் ப்ரிட்டி படேல் அறிவித்துள்ளார்.
இந்த கோல்டன் விசா மூலம் பல நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் பிரித்தானியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது.
இதன்படி இந்த விசா மூலம் இந்தியா சீனா மற்றும் ரஷ்யா போன்ற பல நாடுகளை சேர்ந்த பல பணக்கார முதலீட்டாளர்கள் பிரித்தானியாவில் குடியுரிமை மற்றும் சொத்துக்கள் ஆகியவற்றை வாங்கி வந்தனர்.
இந்த நிலையில் பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத முதலீடுகளை தடுக்கும் நோக்கியில் இனி அனைத்து நாடுகளுக்கும் இந்த கோல்டன் விசா முறையை ரத்து செய்து இருப்பதாக உள்விவகாரத்துறை அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து உள்விவகாரத்து துறை செயலர் ப்ரீத்தி படேல் பேசுகையில்,
உக்ரைனில் போர்ப்பதற்றம் கடுமையாக நிலவி வரும் சூழலில் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நெருங்கிய தொடர்புடைய முதலீட்டாளர்களின் முதலீடு பிரித்தானியாவில் அதிகரித்து பாதுகாப்பை அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் இந்தியா, சீனா, மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் உள்ள பெரும் பணக்கார முதலீட்டாளர்கள் தங்கள் நாடுகளில் சட்டவிரோதமாக சேர்த்த வளங்களை பிரித்தானியாவில் முதலீட்டு செய்து வருகின்றனர்.
இத்தகைய சட்டவிரோத முதலீடுகளை பிரத்தானியாவில் தடுப்பதற்காகவும் இந்த ரத்து அமல்படுத்தப்பட்டு இருப்பதாக ப்ரீத்தி படேல் தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் innovator என்ற புதிய விசா முறை பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.