பெருஞ்சிவனிரவு (சிவராத்திரி) 28. 02. 2022 திங்கட்கிழமை 18.00 மணிமுதல்

Keerthi
2 years ago
பெருஞ்சிவனிரவு (சிவராத்திரி) 28. 02. 2022 திங்கட்கிழமை 18.00 மணிமுதல்

உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம் .

எவ்வுயிர்களாயினும் தம்மறிவால் உணர்தற்கும் ஓதுதற்கும் அரியவனாயும், அங்ஙனம் அரியவனாயினும் தன்னை அடைந்து உய்ய வேண்டும் எனும் பெருங்கருணையினால் பிறைமதி உலாவுதற்கும், கங்கையைத் தாங்குதற்கும் இடனாயுள்ள திருச்சடையை உடையனாயும், அளவிறந்த ஒளியுரு உடையனாயும், தில்லைச் சிற்றம்பலத்தே திருக்கூத்து ஆடுகின்றவனாயும் உள்ள கூத்தப் பெருமானின், அன்பர்கள் உள்ளத்தில் என்றும் மலர்ந்து நிற்கின்ற சிலம்பணிந்த திருவடிகளை சுவிற்சர்லாந்து நாட்டில் பேர்ன் நகரில் ஞானலிங்கேச்சுரத்தில் பதித்து அன்னை ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் இன்பத் தமிழ் கேட்க நாளும் எழுந்தருளியிருக்கிறார். 

பெருஞ்சிவன் நோன்பினை இங்கு நோற்று 4 காலம், 4 வகைச் செந்தமிழ்த் திருமறைத் திருவழிபாட்டினை நேரடியாகச் செய்து, பெருமான் இணையடி வாழ்த்தி வணங்குவோமாக.

ஞானாம்பிகை அன்னைக்கும் ஞானலிங்கப்பெருமானிற்கும் பல்சிறப்பு வழிபாடுகள் 28. 02. 2022 திங்கட்கிழமை 18.00 மணிமுதல் தொடங்கப்பெற்று மறுநாள் 01. 03. 2022 செவ்வாய்க்கிழமை காலை வரை நடைபெறும்.

பல்சிறப்பு அருளமுது நான்கு வேளையும் பெருமானிற்கு படைக்கப்பட்டு அடியார்களுக்கு வழங்கப்படும்.
பெருஞ்சிவனிரவு நாளில் ஞானலிங்கேச்சுரத்தில் ஈழத்துப் பன்முகக் கலைஞர்களது நற்பக்தி இசையுடன் மேலும் பல முத்தமிழ் நிகழ்வுகளும் இடம் பெறும்.

அனைவரும் வருக சிவன் அருள் நிறை பெறுக
"தமிழா வழிபடு, தமிழில் வழிபடு, தமிழ் வழிப்படு"