மின்சாரம் மற்றும் எரிபொருள் தொடர்பில் அரச நிறுவனங்களுக்கு நாளை புதிய சுற்றறிக்கை

Prathees
4 years ago
மின்சாரம் மற்றும் எரிபொருள் தொடர்பில் அரச நிறுவனங்களுக்கு நாளை புதிய சுற்றறிக்கை

மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு ஆலோசனை வழங்கும் புதிய சுற்றறிக்கை நாளை வெளியிடப்படவுள்ளது

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களில் குளிரூட்டிகள் மற்றும் தேவையற்ற மின் விளக்குகளின் பயன்பாட்டை இயன்றளவு குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக அரச வாகனங்களின் எரிபொருளை பயன்படுத்த வேண்டாமெனவும் அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வௌி மாகாணங்களில் இருந்து கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டங்களுக்காக அரச அதிகாரிகளை கொழும்பிற்கு அழைத்துவரும் செயற்பாடுகளும் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4