பள்ளிகள் மூடப்படுவதால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட முடியாது - அமைச்சர் டலஸ்

#SriLanka #School #Dallas Alagaperuma
பள்ளிகள் மூடப்படுவதால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட முடியாது - அமைச்சர் டலஸ்

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரம் எதிர்காலத்தில் வலுப்பெறும் என்றாலும், பாடசாலைகள் மூடப்படுவதால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட முடியாது என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டில் கல்வித்துறையை வலுப்படுத்துவதன் மூலம் அரசியல் வாதிகளை பின்தொடர்ந்து தொழில்களை பெற்றுக்கொள்ளும் முறை நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

இதேவேளை, அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட மாநாட்டில் உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது ஆட்சிக்காலத்தில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்ததாக தெரிவித்தார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4