பாடசாலை மாணவனை துஸ்பிரயோகப்படுத்திய பிக்கு கைது!

Mayoorikka
4 years ago
பாடசாலை மாணவனை  துஸ்பிரயோகப்படுத்திய பிக்கு கைது!

வட்டவளை- ரொசல்ல ஹைட்ரி பகுதியிலுள்ள விகாரையின் விகாராதிபதியொருர் இன்று (21) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹைட்ரி குடியிருப்பு திட்டத்தைச் சேர்ந்த 13 வயது பாடசாலை மாணவனை துஷ்பிரயோகப்படுத்திய குற்றச்சாட்டிலேயே குறித்த விகாராதிபதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் குறித்த சிறுவனின் பெற்றோர் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவனை விகாரைக்குள் அழைத்தே, விகாராதிபதியான பிக்கு துஷ்பிரயோகப்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளான்.

இதனையடுத்து சிறுவன் கிளங்கன் வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்தியரிடம் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், கைதுசெய்யப்பட்ட பிக்கு, ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4