நீதித்துறை சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் 4 பில்லியன் வழங்கியது

Mayoorikka
2 years ago
நீதித்துறை சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் 4 பில்லியன் வழங்கியது

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் நீதி அமைச்சு (MoJ), ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) இலங்கையில் நீதித்துறையை சீர்திருத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் “நீதித்துறை சீர்திருத்த வேலைத்திட்டத்தின் (JURE)” உத்தியோகபூர்வ அறிமுகம் இன்று நீதியமைச்சில் இடம்பெற்றது.

இப்புதிய திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் 18 மில்லியன் யூரோக்களையும் (சுமார் 4 பில்லியன் இலங்கை ரூபாய் ) மேலும் ஐக்கிய நாடுகள் சபை 1 மில்லியன் யூரோக்களையும் (சுமார் 225 மில்லியன் இலங்கை ரூபாய்) வழங்கியது.

மேலும் நீதித்துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் நான்கரை ஆண்டுகளுக்குள் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.