கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் பங்கேற்க இலங்கை – தமிழக யாத்திரிகர்களுக்கு அனுமதி

Prathees
4 years ago
கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் பங்கேற்க இலங்கை – தமிழக யாத்திரிகர்களுக்கு அனுமதி

இலங்கை மற்றும் தமிழகத்தை சேர்ந்த யாத்திரிகர்களுக்கு கச்சதீவு அந்தோனியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் கச்சதீவு அந்தோனியார் தேவாலய திருவிழா நடைபெறவுள்ளது. 

குறித்த திருவிழாவுக்கு 500 பக்தர்களை அனுமதிப்பதாக யாழ். மாவட்ட ரீதியாக தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. 

எனினும், யாத்திரிகர்கள் எவரையும் அனுமதிப்பதில்லை எனவும் அருட்தந்தைகளின் பங்கேற்புடன் மாத்திரம் திருவிழாவை நடாத்தத் தீர்மானித்துள்ளதாகவும் இது குறித்த உத்தரவை அமைச்சரவைக்கு ஜனாதிபதி தெரிவித்தார் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் தெரிவித்தார். 

எவ்வாறாயினும், தற்போதுஇ இலங்கை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தலா 50 யாத்திரிகர்களுக்கு மாத்திரம் கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக யாழ் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4