பேருந்துகளை இயக்க டீசல் இல்லை.. 200 தொலைதூர பேருந்துகள் நிறுத்தம்..

Prathees
4 years ago
பேருந்துகளை இயக்க டீசல் இல்லை.. 200 தொலைதூர பேருந்துகள் நிறுத்தம்..

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான சுமார் 300 தனியார் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் ஒழுங்குபடுத்தப்படும் சுமார் 3, 200 மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்துகள் உள்ளதாகவும், அவற்றில் சுமார் 2,000 பேருந்துகள் தற்போது இயங்கி வருவதாகவும் அதன் தலைவர் சரத் விஜித குமார சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த 2000 இல் 300 பேருந்துகள் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலை தொடருமானால் பேருந்துகளை இயக்க முடியாமல் பயணிகள் கடும் சிரமங்களை சந்திக்க நேரிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சில பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வழமையான டீசல் இல்லை எனவும் சுப்பர் டீசலை அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4