காவிரி நீர் பிரச்சனை - கர்நாடகா செல்லும் தமிழக முதல்வர் விஜய்
கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக நீண்டகாலமாக பிரச்சினை நீடித்து வருகிறது.
நடப்பு ஆண்டிலும் கர்நாடகத்தில் போதிய மழை பெய்யாததால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்குவதில் பிரச்சினை அதிகமாக காணப்படுகிறது.
இதற்கிடையே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டவும் கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முதலமைச்சர் விஜய் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேச முடிவு செய்து கடிதம் அனுப்பியுள்ளார்.
இதற்காக முதலமைச்சர் விஜய் ஆகஸ்ட் 3ம் திகதி பெங்களூருவுக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், 3ம் திகதி முதலமைச்சர் விஜய்யுடன் கர்நாடகா செல்லும் 13 பேர் கொண்ட குழுவின் விவரம் வெளியாகியுள்ளது.
அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் தலைமைச் செயலாளர் சாய்குமார், நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் உள்ளிட்டோர் கர்நாடகா செல்கின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே