விடுதி உரிமையாளரினால் கூலிக்கு அமர்த்தப்பட்டு குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் கைது!

Mayoorikka
4 years ago
விடுதி உரிமையாளரினால் கூலிக்கு அமர்த்தப்பட்டு  குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் கைது!

யாழ்., சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி யாசகம் பெறுகின்றார் என்று அண்மைய நாள்களில் பல்வேறு இடங்களில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் சாவகச்சேரி நகரில் யாசகம் பெற்றவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.

இவ்வாறு யாசகம் பெறுபவர்களின் பணம் விடுதி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதும் யாசகத்தில் ஈடுப்பட்டோருக்கு தினக் கூலி வழங்கப்படுகின்றது எனப் பல தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்பட்டது.

அதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4