பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையை தொடர அனுமதி

Mayoorikka
2 years ago
பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையை தொடர அனுமதி

முன்னதாக, அமைச்சர் ஜி. எல். பீரிஸால் பாராளுமன்றத்தில் முன்வைத்த பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் திருத்தங்களுக்கு எதிராக பல தனிநபர்கள் மற்றும் அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர் நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது.

மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்துவினால் பயங்கரவாத தடை சட்டத்தை திருத்தும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என தெரிவித்து விசேட தீர்மான மனுவொன்றை தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், பயங்கரவாத தடைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இரண்டு மனுதாரர்களும் திருத்தங்கள் இலங்கை அரசியலமைப்பின் 3, 4, 11, 12(1), 13(1), 13(3), 13(4), 13(5), 138 மற்றும்/அல்லது 141 ஆகிய சட்டங்களுக்கு முரணானவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.