எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பஸ் சேவையில் கடும் பாதிப்பு

Mayoorikka
2 years ago
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பஸ் சேவையில் கடும் பாதிப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளாந்தம் மாகாணங்களுக்கு இடையிலான 250 தனியார் பஸ்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக  தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்தார்.

பஸ் ஒரு இடத்துக்கு வந்தாலும் மற்றைய இடத்திற்குச் செல்வதற்கு எரிபொருள் இல்லாத நேரங்களும் உண்டு என விஜித குமார தெரிவித்தார்.

டீசல் தட்டுப்பாடு காரணமாக பஸ்களின் இயக்கம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் இதனால் பயணிகள் மட்டுமின்றி பஸ் உரிமையாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாகாணங்களுக்கிடையிலான தனியார் பஸ்கள் சுமார் 3,200 இருந்தாலும், அவற்றில் சுமார் 2,000 பஸ்கள் மட்டுமே தற்போது இயங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலை தொடருமானால் பஸ்களை இயக்க முடியாமல் பயணிகள் கடும் சிரமங்களை சந்திக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்தார்.