எண்ணெய் வாங்க பணம் கொடுங்கள் - ஜனாதிபதி மத்திய வங்கியிடம் தெரிவித்துள்ளார்

#SriLanka #Gotabaya Rajapaksa #Sri Lanka President
எண்ணெய் வாங்க பணம் கொடுங்கள் - ஜனாதிபதி மத்திய வங்கியிடம் தெரிவித்துள்ளார்

நாட்டிற்கு தேவையான மின்சாரம் மற்றும் எரிபொருளை உற்பத்தி செய்வதற்கு போதிய நிதியை வழங்குமாறு இலங்கை மத்திய வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

இது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காகும்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பத்திரன, நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
எரிபொருள் விலை தொடர்பில் அமைச்சர் பின்வரும் கருத்துக்களையும் தெரிவித்தார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கடன் வரம்புக்கு அப்பால் கடன்களை வழங்க வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி அண்மையில் அரச வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கைக்கு எரிபொருள் கொண்டு வரும் கப்பல்களுக்கு டொலர்களை கண்டுபிடிப்பது மத்திய வங்கியின் பணியல்ல என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.