பரசிட்டமோல் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ன?

Mayoorikka
2 years ago
பரசிட்டமோல் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ன?

நாட்டில் பரசிட்டமோல் மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதாக பல்வேறு தரப்பினரும் கூறி வந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.

அதற்கமைய, கடந்த 3 வாரங்களில் மாத்திரம் பரசிட்டமோல் தேவைப்பாடு நூற்குக்கு 275 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாட்டில் ஒமிக்ரோன் வைரஸ், மற்றுமொரு வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு நோய் ஆகியன பரவி வருவதன் விளைவாக, இந்த மூவகையான காய்ச்சலையும் கட்டுப்படுத்தக்கூடிய பிரதான மருந்தாக பெரசிட்டமோல் காணப்படுவதால், தற்போது அதற்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, உலக சந்தையில் பெரசிட்டமோலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, மருந்து இறக்குமதியாளர்கள் பெரசிட்டமோல் கொள்வனவை மேற்கொள்வதற்கு தயங்கி வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இதன் காரணமாகவே தற்போது நாட்டில் பெரசிட்டமோல் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், எவ்வாறாயினும் அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக பெரசிட்டமோல் மருந்தின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். எனவே விரைவில் பெரசிட்டமோல் மருந்துகளுக்கான தட்டுப்பாடு நீங்குமெனவும் இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.