குழந்தைகளுக்கு கொரோனா தொற்றுடன் தொடர்புடைய பிறழ்வு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்: சுகாதாரத்துறை எச்சரிக்கை

Mayoorikka
4 years ago
குழந்தைகளுக்கு கொரோனா தொற்றுடன் தொடர்புடைய பிறழ்வு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்: சுகாதாரத்துறை எச்சரிக்கை

கொரோனா தடுப்பூசி வழங்கப்படாவிட்டால் பிள்ளைகளுக்கு கொரோனா தொற்றுடன் தொடர்புபட்ட ´மிஸ் சி´ Multisystem Inflammatory Syndrome in Children (MIS-C) நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது பிற்காலத்தில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தும் என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா, சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படாவிட்டால் நோய் நிலைமை மோசமடைந்து சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே, 5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி வழங்க எதிர்பார்த்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4