பேக்கரி தொழிலை நடாத்த முடியாது! 300 சிறிய பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன

Prathees
4 years ago
பேக்கரி தொழிலை நடாத்த முடியாது! 300 சிறிய பேக்கரிகள்  மூடப்பட்டுள்ளன

பேக்கரி தொழில் நடத்துவதை பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகளால் ஒட்டுமொத்த பேக்கரி உரிமையாளர்களும் ஆதரவற்ற நிலையில் உள்ளனர் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரி கைத்தொழிலை இனிமேலும் பராமரிக்க முடியாது எனவும், சுமார் 200-300 சிறிய பேக்கரிகள் முற்றாக மூடப்பட்டு அவற்றின் உபகரணங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நாட்டில் உள்ள 7000 பேக்கரிகளில் சுமார் 4000 பேக்கரிகளில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பண் உற்பத்தி செய்யப்படுவதாக அவர் தெரிவித்ததார்.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு,பாமாயில், தேங்காய் எண்ணெய் மற்றும்  மாஜரின் விலைகள் 100 வீதம் அதிகரித்துள்ளதை பேக்கரி உரிமையாளர்கள் தாங்கிக்கொள்ள முடியாதுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி பேக்கரி தொழிலை புத்துயிர் பெற தலையிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4