0.88 கிராம் போதைப்பொருள் உட்கொண்ட நான்கு மாத குழந்தை உயிரிழப்பு

0.88 கிராம் போதைப்பொருள் உட்கொண்ட நான்கு மாத குழந்தை உயிரிழப்பு

Troyes (Aube) நகரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இங்கு வசிக்கும் தந்தை ஒருவர் SAMU மருத்துவ உதவிக்குழுவினரை அழைத்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உதவிக்குழுவினர் மயங்கி கிடந்த நிலையில் குழந்தை ஒன்றை மீட்டனர். குழந்தைக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர். ஆனால் குழந்தை ஏற்கனவே மரணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதையடுத்து, தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவம் தொடர்பில் ஆராயப்பட்டது. பின்னர் குழந்தையின் சடலம் உடற்கூறு பரிசோதனைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

பரிசோதனைகளின் முடிவில் குழந்தை போதைப்பொருள் உட்கொண்டதால் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குழந்தையின் இரத்தத்தில் 0.88 கிராம் மது கலந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக குழந்தையின் தந்தை மற்றும் தாயார் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு