திருமதி கருணாகரன் சாரதாம்பாள்

Nila
2 years ago
திருமதி கருணாகரன் சாரதாம்பாள்

புங்குடுதீவு 10வட்டாரத்தை பிறப்பிடமாக்க் கொண்ட திருமதி.சாரதாம்பாள் கருணாகரன் அவர்கள் 22.02.2022 செவ்வாய்க்கிழமை அன்று யாழ் மருத்துவமனையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான  கொழும்பு ஆமர்வீதி வர்த்தகர் ஆர்.எம்.சின்னத்தம்பி முத்தம்மா தம்பதிகளின் அருமை மகளும்,

புங்குடுதீவு மணியம்ஸ் ஸ்ரோர்ஸ் சுப்பிரமணியம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பிரபல சமூகத்தொண்டர் வர்த்தகர் மறைந்த கருணாகரன் அவர்களின் அன்பு துணைவியாரும்,

சுகிர்தா  கலையரசி.முரளிதரன்  நாவலன்(வேலணை பிரதேச சபை உறுப்பினர்), குணாளன்(சமுக தொண்டன்  )ஆகியோரின் அருமைத் தாயாருமாவார்.

அமைதியும் சாந்தமும் நிறைந்தவராய் தாய்க்குலத்தில் தங்கமாய் வந்துதித்த எங்கள் சாரதா  அக்கா அவர்களின் பிரிவுச்செய்தி கேட்டு ஆழ்ந்த துயரமடைந்து ஆத்மா சாந்தியடைய கண்ணகை கலட்டி பிள்ளையார் திருவடிகளை வேண்டுகிறோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்
குடும்பத்தினர்