ஆயிரம் ரூபா விவகாரம்: முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இன்று

Mayoorikka
2 years ago
ஆயிரம் ரூபா விவகாரம்: முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இன்று

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறுகோரி, முதலாளிமார் சம்மேளனத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான வழக்கு விசாரணை இன்று (24) மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர்களின் சார்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. இதனை பெருந்தோட்டக் கம்பனிகள் ஏற்க மறுத்தன.

இறுதியில் இது விடயத்தில் தொழில் அமைச்சுக்கு தலையிட வேண்டி ஏற்பட்டது. அந்தவகையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என சம்பள நிர்ணய சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டு, அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய தோட்டக் கம்பனிகள், மேற்படி வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி வழக்கு தாக்கலும் செய்தன. ஓரிரு தடவைகள் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இன்றும் விசாரணை இடம்பெறவுள்ளது.