இலங்கையில் மின்சாரம் துண்டிக்கப்படாத இடங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka
Lanka4
2 years ago
இலங்கையில்  மின்சாரம் துண்டிக்கப்படாத இடங்கள் தொடர்பில்  வெளியான அறிவிப்பு!

மருத்துவமனைகள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், உயர்பாதுகாப்பு வலயங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு மின்சார விநியோகம் தடைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுழற்சி முறையில் இன்றைய தினமும் (வியாழக்கிழமை) நான்கு மணித்தியாலங்களுக்கு அதிக காலம் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய இன்றைய தினம் A,B மற்றும் C ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு 4 மணித்தியாலமும் 40 நிமிடமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஏனைய வலயங்களுக்குள் உள்ளடங்கும் பகுதிகளுக்கு  4 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதேபோன்று கொழும்பில் இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகள் குறித்த திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்குள் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல பிரிவுகளின் கீழ் நாடு முழுவதும் நான்கரை மணி நேர மின்வெட்டிற்கும் இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, சில வலயங்களில் 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களும் ஏனைய வலயங்களில் 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.