ரஷியா-உக்ரைன் இடையிலான போர்: உகல நாடுகளின் என்னென்ன மாற்றங்கள் நிகழும்

Nila
2 years ago
ரஷியா-உக்ரைன் இடையிலான போர்: உகல நாடுகளின் என்னென்ன மாற்றங்கள் நிகழும்

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் உலக பொருளாதாராத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். இதன் எதிரொலியாக, இந்தியாவில் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, இந்திய பங்கு சந்தைகள் சரிவு கண்டுள்ளன. 

ஏற்கனவே உலக அளவில் பல நாடுகள் கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பொருளாதாரத்தில் பெரிதளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. உக்ரைன் மீது ரஷியா போரினை தொடங்கியுள்ளதால், பல நாடுகளும் ரஷியா மீது பொருளாதார நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளன. இதன் காரணமாக எரிபொருள் விலையேற்றம்,  பணவீக்கம், சந்தை பொருட்களின் தொடர் சங்கிலி பாதிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நடவடிக்கையால் இந்தியாவில் விலை உயரும் பொருட்கள் என்னென்ன?

பெட்ரோல் விலை உயர்வு

கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு உச்சபட்சமாக,  கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலரை தாண்டியுள்ளது. கச்சா எண்ணெயின் மிகப் பெரிய உற்பத்தியாளர்களில் ரஷியாவும் ஒன்று. கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததை அடுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை தொட்டுள்ளது. 125 டாலர் வரை உயரும்.

கச்சா எண்ணெயின் விலை உயர்வால் இந்தியா முழுவதும் கடந்த 2021 ஆம் ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல் டீசல் விலை அதிகரித்தது. இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களில் 25 சதவீதம் எண்ணெய் பொருட்கள் உள்ளன. 80 சதவீதத்திற்கு மேல் எண்ணெய் தேவைகளுக்காக இந்தியா பிற நாடுகளை நம்பியுள்ளது.இந்த நிலையில், ரஷிய போரால் இந்தியாவில் எரிபொருட்களின் விலையேற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது. 

உள்நாட்டு உற்பத்தி பாதிப்பு

கச்சா எண்ணெயின் விலை உயர்வு உலக உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி)யில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பெட்ரோல் விலை பேரலுக்கு 150 டாலர்கள் உயர வாய்ப்புள்ளது. உலக ஜிடிபி வளர்ச்சியும் 0.9 சதவீதம் குறையும் அபாயம் இருக்கிறது. அது போல் இயற்கை வாயுக்களின் விலையு்ம உயரும். சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிகம் பாதிப்பை சந்திக்கும்.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம்

கச்சா எண்ணெய் விலை கட்டுக்கடங்காமல் உயர்வதால், கண்டிப்பாக சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையேற்றம் தவிர்க்க இயலாத ஒன்றாக மாற உள்ளது. இதன் காரணமாக பிற அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், உணவுப்பொருட்களின் விலையேற்றம் நடக்கும் அபாயம் உள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களும் சரிவு

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,366 புள்ளிகள் சரிந்து 55,865 புள்ளிகளில் வணிகமாகிறது, மேலும் நிஃப்டி 300 புள்ளிகளுக்கு மேலும் சரிந்து வர்த்தகம் ஆகிறது.

பங்குச்சந்தைகள் சரிவால் முதலீட்டாளர்களுக்கு சில லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. போர் காரணமாக முதலீட்டாளர்கள் அச்சமடைந்து தங்கள் முதலீடுகளை வெளியே எடுக்கின்றனர். இதன் காரணமாக தங்கம் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையும்.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு சென்னையில் ரூ.864 அதிகரித்தது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.38,616க்கும்  ஒரு கிராம் ரூ.4827க்கும்,  சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் ரூ.70.60க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உலக அளவில் பொருளாதார பாதிப்பு

உலக அளவில் ரஷியா கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு பயன்பாட்டில் 40 சதவீதம் ரஷியாவிலிருந்து அனுப்பப்படுகிறது.

இப்போதைய சூழலில் பொருளாதார தடைகள் ரஷியா மீது போடப்பட்டுள்ளதால் எரிவாயு கொண்டு செல்வது தடைபடும்.ஐரோப்பிய யூனியனுக்கு நார்டு ஸ்ட்ரீம்-2 குழாய்கள் வழியாக பால்டிக் கடற்பகுதி வாயிலாக எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. சமீபத்திய நெருக்கடிகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தடை நடவடிக்கைகளால் இந்த சேவை பாதிக்கப்படும்

எண்ணெய் விலை 100 அமெரிக்க டாலர்களை தாண்டி சென்றுள்ளது. இந்த விலையேற்றம் இன்னும் அதிகரிகக்கூடும் என தெரிகிறது. உலக அரங்கில் கச்சா எண்ணெய் விலை 150 அமெரிக்க டாலர்களை கடந்து செல்ல வாய்ப்புள்ளது.

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்திக்கும். ஆசிய அமெரிக்க, உலக பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்திக்கும்.

உணவு களஞ்சியமாக இருக்கும் உக்ரைன், உலக அளவில் சோளம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதல் 5 இடங்களுக்குள் உள்ளது.போர் தொடங்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து ஏற்றுமாதியாகும் பொருட்களின் சேவை பாதிப்படையும். இதனால் சமையல் எண்ணெய், கால்நடை தீவனம், சோயாபீன் போன்ற பொருட்களின் விலை கடுமையாக உயரும்.

கோதுமை விலை உயர்வு

உலக அளவில் கோதுமை ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் நாடு ரஷியா. உக்ரைனும் கோதுமை ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், தற்போதைய சூழலில் கோதுமை ஏற்றுமதி அதிகம் பாதிக்கப்படும். உலகின் கோதுமை தேவையை பூர்த்தி செய்வதில் 29 சதவீதம் இவ்விரு நாடுகளில் இருந்து செல்கிறது. இதன்காரணமாக அங்கிருந்து கோதுமை இறக்குமதி செய்யும் எகிப்து, வங்காளதேசம், துருக்கி போன்ற நாடுகளில் விலையேற்றம் அடையும். இதனால் பிரட், மாவுப்பொருட்கள், பாஸ்தா மற்றும் இதர கோதுமை பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

மொபைல் போன்கள் உற்பத்திக்கு பயன்படும் பெல்லேடியம் ஏற்றுமதியில் மிகப்பெரிய நாடாக ரஷியா திகழ்கிறது. இந்த உலோகம் வாகன் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது, பல் மருத்துவ துறை, நகை செய்யும் இடங்கள் மற்றும் இன்னும் பல முக்கிய தொழில் துறைகளில் பயன்படுகிறது. போர் காரணமாக இந்த வ்லோக ஏற்ற்மதி பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என்பதால் இந்த துறை சம்பந்தப்பட்ட பொருட்களின் விலை ஏற்றம் அடையும்.