கர்ம சன்யாச யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 53.

#history #Article #Tamil People
கர்ம சன்யாச யோகம் -  ஸ்ரீமத் பகவத்கீதை. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 53.

ஐந்தாவது அத்தியாயம் (கர்ம சன்யாச யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத பம்சமோ அத்ய:।

கர்ம சன்யாச யோகம்
(ஒன்றை தேர்ந்தெடுத்து செயல்பாடு)

அர்ஜுன உவாச।
ஸம்ந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புநர்யோகம் ச ஷம்ஸஸி।
யச்ச்ரேய ஏதயோரேகம் தந்மே ப்ரூஹி ஸுநிஷ்சிதம்॥ 5.1 ॥

அர்ஜுனன் கேட்டது : கிருஷ்ணா ! செயல்களை விடுவது பற்றியும் சொல்கிறாய், அதே வேளையில் கர்மயோகம் செய்வது பற்றியும் சொல்கிறாய். இவற்றுள் எது சிறந்தது என்று எனக்கு நன்றாக உறுதி செய்யப்பட்டுள்ளதோ அந்த ஒன்று எனக்கு சொல்வாய்.

ஸ்ரீபகவாநுவாச।
ஸம்ந்யாஸ: கர்மயோகஷ்ச நி:ஷ்ரேயஸகராவுபௌ।
தயோஸ்து கர்மஸம்ந்யாஸாத்கர்மயோகோ விஷிஷ்யதே॥ 5.2 ॥

ஸ்ரீ பகவான் கூறினார்: செயல்களை விடுவது, கர்மயோகத்தில் ஈடுபடுவது ஆகிய இரண்டும் உயர்ந்த பலனை அளிப்பவை தான். அவற்றுள் செயல்களை விடுவதை விட கர்மயோகம் சிறந்தது.

ஜ்ஞேய: ஸ நித்யஸம்ந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி।
நிர்த்வந்த்வோ ஹி மஹாபாஹோ ஸுகம் பந்தாத்ப்ரமுச்யதே॥ 5.3 ॥

பெருந்தோள் உடையவனே ! யார் வெறுப்பதும் விரும்புவதும் இல்லையோ அவனே மிக உயர்ந்த துறவி. ஏனெனில் இருமைகள் அற்றவன் பந்தத்திலிருந்து எளிதில் விடுபடுகிறான்.

ஸாங்க்யயோகௌ ப்ருதக்பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா:।
ஏகமப்யாஸ்தித: ஸம்யகுபயோர்விந்ததே பலம்॥ 5.4 ॥

செயல்களை விடுவது, செயல்களில் ஈடுபடுவது இரண்டும் வெவ்வேறானவை என்று பக்குவம் பெறாதவர்கள் பேசுகிறார்கள். அறிவாளிகள் அவ்வாறு பேசுவது இல்லை. இரண்டில் ஏதாவது ஒன்றையேனும் உரிய முறையில் கடைபிடித்தவன் இரண்டையும் பின்பற்றிய பலனை அடைகிறான்.

யத்ஸாங்க்யை: ப்ராப்யதே ஸ்தாநம் தத்யோகைரபி கம்யதே।
ஏகம் ஸாங்க்யம் ச யோகம் ச ய: பஷ்யதி ஸ பஷ்யதி॥ 5.5 ॥

செயலை விடுபவர்கள் அடைகின்ற நிலையை கர்மயோகிகளும் அடைகிறார்கள். செயலை விடுவது, செயலில் ஈடுபடுவது இரண்டையும் ஒன்றாக யார் காண்கிறானோ அவனே காண்கிறான்.

ஸம்ந்யாஸஸ்து மஹாபாஹோ து:கமாப்துமயோகத:।
யோகயுக்தோ முநிர்ப்ரஹ்ம நசிரேணாதிகச்சதி॥ 5.6 ॥

பெருந்தோள் உடையவனே ! செயல்களில் ஈடுபடாமல் செயல்களை விடுகின்ற நிலையை அடைவது கடினமானது. செயல்களில் ஈடுபடுகின்ற சாதகன் விரைவில் இறைவனை அடைகின்றான்.

யோகயுக்தோ விஷுத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரிய:।
ஸர்வபூதாத்மபூதாத்மா குர்வந்நபி ந லிப்யதே॥ 5.7 ॥

செயலை யோகமாக செய்பவன், தூய மனத்தை உடையவன், உடம்பை தன் கட்டுபாட்டில் வைத்திருப்பவன், புலன்களை வென்றவன், தன் ஆன்மாவை எல்லா உயிர்களுக்கும் ஆன்மாவாக காண்பவன் செயலில் ஈடுபட்டாலும் அதனால் பந்தத்திற்கு உள்ளாவதில்லை .

நைவ கிம்சித்கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித்।
பஷ்யஞ்ஷ்ருண்வந்ஸ்ப்ருஷஞ்ஜிக்ரந்நஷ்நம்கச்சந்ஸ்வபந்ஷ்வஸந்॥ 5.8 ॥

ப்ரலபந்விஸ்ருஜந்க்ருஹ்ணந்நுந்மிஷந்நிமிஷந்நபி।
இந்த்ரியாணீந்த்ரியார்தேஷு வர்தந்த இதி தாரயந்॥ 5.9 ॥

உண்மையை உணர்ந்து செயலில் ஈடுபடுபவன் பார்த்தாலும் கேட்டாலும், தொட்டாலும், முகர்தாலும், உண்டாலும், நடந்தாலும், தூங்கினாலும், சுவாசித்தாலும், பேசினாலும், இயற்கை கடன்களை கழித்தாலும் , கண் மூடினாலும் புலன்கள் பொருட்களில் செயல்படுகின்றன என்று புரிந்துகொண்டு “ நான் எதையும் செய்யவில்லை “ என்று நினைக்க வேண்டும்.

ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய:।
லிப்யதே ந ஸ பாபேந பத்மபத்ரமிவாம்பஸா॥ 5.10 ॥

இறைவனில் தன்னை சமர்ப்பித்து , பற்றை விட்டு வேலை செய்பவன், நீரினால் தாமரை இலை நனைக்கபடாதது போல், பாவத்தால் பாதிக்க படுவதில்லை.

காயேந மநஸா புத்த்யா கேவலைரிந்த்ரியைரபி।
யோகிந: கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்மஷுத்தயே॥ 5.11 ॥

செயலில் செயலின்மை காண்கின்ற கர்மயோகிகள் பற்றை விட்டு மனத்தூய்மைக்காக உடல், மனம், அறிவு என்று வெறுமனே புலன்களால் வேலை செய்கிறார்கள்.

யுக்த:கர்மபலம் த்யக்த்வா ஷாந்திமாப்நோதி நைஷ்டிகீம்।
அயுக்த: காமகாரேண பலே ஸக்தோ நிபத்யதே॥ 5.12 ॥

மனம் அடங்கபெற்றவன் பலனை எதிர்பாராமல் வேலை செய்வதால் தடையற்ற அமைதி பெறுகிறான். மனம் அடங்க பெறாதவன் ஆசை வசப்பட்டு, பலனில் பற்று வைத்து அதன் காரணமாக பந்தத்திற்கு உள்ளாகிறான்.

ஸர்வகர்மாணி மநஸா ஸம்ந்யஸ்யாஸ்தே ஸுகம் வஷீ।
நவத்வாரே புரே தேஹீ நைவ குர்வந்ந காரயந்॥ 5.13 ॥

சுயகட்டுப்பாடு உடையவன் எல்லா செயல்களையும் மனத்தால் துறந்துவிட்டு எதையும் செய்யாதவனாக, எதையும் செயவிக்காதவனாக, ஒன்பது வாசல் கொண்ட நகரமான உடம்பில் சுகமாக தங்கியிருக்கிறான்.

ந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு:।
ந கர்மபலஸம்யோகம் ஸ்வபாவஸ்து ப்ரவர்ததே॥ 5.14 ॥

செயல்கள், செயல்களுக்கான பொறுப்பு, செயலின் பலன்களை ஏற்றல் என்று எதையும் இறைவன் நமக்காக வைக்கவில்லை. அனைத்தையும் இயற்கையே செய்கிறது.

நாதத்தே கஸ்யசித்பாபம் ந சைவ ஸுக்ருதம் விபு:।
அஜ்ஞாநேநாவ்ருதம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ:॥ 5.15 ॥

எங்கும் நிறைந்தவரான இறைவன் யாருடைய பாவத்தையோ புன்னியத்தையோ ஏற்றுகொல்வதில்லை. அறிவு, அறியாமையால் மூடப்பட்டு இருக்கிறது. அதனால் நாம் மன மயக்கம் அடைகிறோம்.

ஜ்ஞாநேந து ததஜ்ஞாநம் யேஷாம் நாஷிதமாத்மந:।
தேஷாமாதித்யவஜ்ஜ்ஞாநம் ப்ரகாஷயதி தத்பரம்॥ 5.16 ॥

ஆன்ம ஞானத்தால் யாருடைய அறியாமை அழிக்கபட்டதோ அவர்களது ஞானம், சூரியன் மற்ற பொருட்களை காண செய்வது போல் பரம்பொருளை காட்டுகிறது.

தத்புத்தயஸ்ததாத்மாநஸ்தந்நிஷ்டாஸ்தத்பராயணா:।
கச்சந்த்யபுநராவ்ருத்திம் ஜ்ஞாநநிர்தூதகல்மஷா:॥ 5.17 ॥

ஆன்மாவிலேயே புத்தியை நிலைக்கசெய்த, ஆன்மாவையே தாங்களாக உணர்கின்ற, ஆன்மாவிலேயே ஈடுபடுகின்ற, ஆன்மாவையே புகலிடமாக கொண்ட, ஞானத்தால் குற்றங்களை போக்கிக்கொண்டவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.

வித்யாவிநயஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி।
ஷுநி சைவ ஷ்வபாகே ச பண்டிதா: ஸமதர்ஷிந:॥ 5.18 ॥

கல்வியும் பணிவும் பொருந்திய சான்றோனிலும், பசுவிலும், யானையிலும், நாயிலும், நாயை சமைத்து உண்பவனிலும் மகான்கள் சாமநோக்கு உடையவர்களாக இருக்கிறார்கள்.

இஹைவ தைர்ஜித: ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந:।
நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்திதா:॥ 5.19 ॥

யாருடைய மனம் சமநிலையில் உறுதியாக இருக்கிறதோ, அவர்கள் இந்த பிறவியிலேயே பிறப்பு – இறப்பு என்னும் சுழற்சியை வென்றுவிட்டவர்கள். எனவே குறைகள் அற்றவரும் சமநோக்கு உடையவருமான இறைவனில் நிலைபெற்று இருக்கிறார்கள்.

ந ப்ரஹ்ருஷ்யேத்ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத்ப்ராப்ய சாப்ரியம்।
ஸ்திரபுத்திரஸம்மூடோ ப்ரஹ்மவித் ப்ரஹ்மணி ஸ்தித:॥ 5.20 ॥

புத்தி விழித்தெழபெற்ற, மனமயக்கம் அற்ற, இறைவனை அறிந்த, இறைவனில் நிலைத்திருக்கின்ற ஒருவன் விரும்புவது கிடைப்பதால் மகிழ்வதும் இல்லை, விரும்பாதது கிடைப்பதால் துயருவதும் இல்லை.

பாஹ்யஸ்பர்ஷேஷ்வஸக்தாத்மா விந்தத்யாத்மநி யத்ஸுகம்।
ஸ ப்ரஹ்மயோகயுக்தாத்மா ஸுகமக்ஷயமஷ்நுதே॥ 5.21 ॥

புற விஷயங்களில் பற்றில்லாத அவன் , ஆன்மாவில் எந்த இன்பம் உண்டோ அந்த இன்பத்தை அடைகிறான். இறைவனுடன் ஒன்றுபட்ட நிலையில் குறைவற்ற இன்பத்தை அடைகிறான்.

யே ஹி ஸம்ஸ்பர்ஷஜா போகா து:கயோநய ஏவ தே।
ஆத்யந்தவந்த: கௌந்தேய ந தேஷு ரமதே புத:॥ 5.22 ॥

குந்தியின் மகனே ! புலன்களின் தொடர்பால் தோன்றிய சுகங்கள் துக்கதிற்கே காரணமானவை, ஆரம்பமும் முடிவும் உடையவை. அவற்றில் ஞானிகள் இன்புருவதில்லை.

ஷக்நோதீஹைவ ய: ஸோடும் ப்ராக்ஷரீரவிமோக்ஷணாத்।
காமக்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த: ஸ ஸுகீ நர:॥ 5.23 ॥

உடம்பை விடுவதற்கு முன்பு இங்கேயே ஆசை, கோபம் போன்றவற்றால் எழுகின்ற வேகத்தை எதிர்கொள்வதற்கு வல்லவன் யாரோ அவனே யோகி, அவனே இன்பத்தை அனுபவிப்பான்.

யோ அந்த:ஸுகோ அந்தராராமஸ்ததாந்தர்ஜ்யோதிரேவ ய:।
ஸ யோகீ ப்ரஹ்மநிர்வாணம் ப்ரஹ்மபூதோ அதிகச்சதி॥ 5.24 ॥

யார் தன்னில் இன்பம் கான்கின்றானோ, தன்னில் நிலை பெற்றுள்ளானோ, தன்னுள் ஒளியை காண்கின்றானோ, அந்த யோகி மட்டுமே , தானே பிரம்மமாகி பேரானந்தத்தை அடைகிறான்.

லபந்தே ப்ரஹ்மநிர்வாணம்ருஷய: க்ஷீணகல்மஷா:।
சிந்நத்வைதா யதாத்மாந: ஸர்வபூதஹிதே ரதா:॥ 5.25 ॥

(துன்பம் – இன்பம், சூடு – குளிர் போன்ற) இருமைகளிலிருந்து விடுபட்ட, புலன்களை வென்ற, எல்லா உயிர்களின் நன்மையில் மகிழ்கின்ற முனிவர்கள் பாவங்கள் நீங்கபெற்று பிரமானந்தத்தை அடைகிறார்கள்.

காமக்ரோதவியுக்தாநாம் யதீநாம் யதசேதஸாம்।
அபிதோ ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே விதிதாத்மநாம்॥ 5.26 ॥

ஆசை, கோபம் ஆகியவற்றை விட்ட, மனம் அடங்கபெற்ற, ஆன்மாவை அறிந்த துறவியருக்கு மோட்சம் அருகில் இருக்கிறது.

ஸ்பர்ஷாந்க்ருத்வா பஹிர்பாஹ்யாம்ஷ்சக்ஷுஷ்சைவாந்தரே ப்ருவோ:।
ப்ராணாபாநௌ ஸமௌ க்ருத்வா நாஸாப்யந்தரசாரிணௌ॥ 5.27 ॥

யதேந்த்ரியமநோபுத்திர்முநிர்மோக்ஷபராயண:।
விகதேச்சாபயக்ரோதோ ய: ஸதா முக்த ஏவ ஸ:॥ 5.28 ॥

புற விஷயங்களை வெளியில் நிறுத்தி, பார்வையை புருவ நடுவில் நிறுத்தி, நாசிகளின் வழியாக சஞ்சரிக்கின்ற பிராண அபானன்களை சமபடுத்தி புலன், மனம், புத்தி ஆகியவற்றை வசபடுத்தி, ஆசை பயம், கோபம் ஆகியவற்றை விட்டு முக்தியை நாடுகின்ற யோகி முக்தனே ஆவான்.

போக்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஷ்வரம்।
ஸுஹ்ருதம் ஸர்வபூதாநாம் ஜ்ஞாத்வா மாம் ஷாந்திம்ருச்சதி॥ 5.29 ॥

வேள்வி, தவம் ஆகியவற்றை அனுபவிப்பவன் எல்லா உலகங்களுக்கும் தலைவன், எல்லா உயிர்களின் நண்பன் என்று என்னை அறிபவன் அமைதியை அடைகிறான்.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே ஸம்ந்யாஸயோகோ நாம பம்சமோ அத்யாய:॥ 5 ॥

ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'கர்ம சன்யாச யோகம்' எனப் பெயர் படைத்த ஐந்தாவது அத்தியாயம் நிறைவுற்றது.

விளக்கம்:

இரண்டு முறைகளில் இறைவனை அடையலாம். ஒன்று செயல்கள் எதையும் செய்யாமல் இருப்பது அதாவது ஞான மார்க்கம் ( தியானம் ). மற்றொன்று எல்லா வேலைகளையும் செய்து கொண்டே இருப்பது அதாவது கர்ம யோகம். இரண்டிலும் கட்டாயமாக இறைவனை அடையலாம்.

இதில் முதலில் கூறிய ஞான மார்க்கம் மிகவும் கடினமானது. அனைத்து செயல்களையும் விட்டு விட்டு மனத்தை நிலைபடுத்தி தனக்கு உள்ளே இதயத்தில் இருக்கும் ஆன்மாவை காண முயல வேண்டும். மேலும் மனம் மிகவும் அலைபாயும் தன்மை உடையது. அதை ஒரு நிலை படுத்துவது மிகவும் கடினம்.

ஆனால் கர்மயோகமோ எளிதில் கடைபிடிக்க கூடியது. அதாவது இதில் உள்ள மனிதன் அனைத்து கடமைகளையும் செய்யலாம் ஆனால் செயலின் பலனில் பற்று / ஆசை வைக்க கூடாது. செயலின் விளைவு சாதகமாக இருந்தால் இன்பம் கொள்வதும் விளைவு பாதகமாக இருந்தால் துக்கம் கொள்வதும் கூடாது. இன்பம் - துன்பம் இரண்டையும் சமமாக கருத வேண்டும். ஏனெனில் இது தான் இயற்கை. இது மாறிமாறி ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இப்படி பலனில் விருப்பம் கொள்ளாமல் இருப்பதால் இந்த மனிதன் எந்த பாவத்திற்கும் உள்ளாகாமல் தூயவனாக இருந்து இறைவனை முழுவதும் அறிந்து அவரை நோக்கி முன்னேறுகிறான்.

மேலும் அனைத்திலும் இறைவன் இருக்கிறார். ஆகையால் நண்பன் – பகைவன், நாய், மாமிசம் உண்பவன், அசையும் பொருள், அசையா பொருள், மண், கல், பொன் அனைத்தையும் சமமாக காண வேண்டும். முற்றிலும் உண்மையை உணர்ந்த மனிதன் இவ்வாறு காண்கின்றான்.
 

தொடரும்...