ஒரு லீற்றர் திரவப் பாலை 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை

#SriLanka #Sri Lanka President #Milk Powder
ஒரு லீற்றர் திரவப் பாலை 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை

ஒரு லீற்றர் திரவப் பாலை 100 ரூபாவிற்கு கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விவசாயிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாரஹேன்பிட்டி மில்கோ தொழிற்சாலையை இன்று (25) காலை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கினார். பி. ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை, திரவ பால் கொள்வனவுகளில் காணப்படும் முரண்பாடுகளை களைவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் இராஜாங்க அமைச்சர் டி. பி. ஹேரத்துக்கு இவ்வாறு அறிவுறுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பால் பண்ணையாளர்களிடம் இருந்து பாலை கொள்வனவு செய்வதிலும் நிறுவனங்களுக்கு கொண்டு செல்வதிலும் இடைத்தரகர்கள் மேற்கொள்ளும் முறைகேடுகளை தவிர்ப்பதற்கு முழு செயற்பாடுகளும் முழுமையாக கண்காணிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4