அரசாங்கத்தின் வருமானம் 2.956 டிரில்லியன் ரூபாவாக உயர்வு - முதல் முறையாக வரவு செலவு திட்டத்தில் உபரி சேமிப்பு
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் மற்றும் மானியங்கள் 27 சதவீதத்தால் அதிகரித்து 2.956 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.
இக்காலப்பகுதியில் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு பதிலாக 9.5 பில்லியன் ரூபா உபரி பதிவாகியுள்ளதாக நிதியமைச்சின் அரச நிதிப் கொள்கை திணைக்களம் வெளியிட்டுள்ள அரச நிதி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 405.6 பில்லியன் ரூபா வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை பதிவாகியிருந்த நிலையில், இம்முறை உபரி பதிவாவதற்கு அரசாங்க வருமானம் 27 சதவீதத்தால் அதிகரித்தமையும் அரசாங்கச் செலவினங்கள் சீரமைக்கப்பட்டமையுமே பிரதான காரணங்களாகும் என அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
2026 இன் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 2,710.6 பில்லியன் ரூபா வரை, அதாவது 2.71 டிரில்லியன் ரூபா வரை உயர்ந்துள்ளதுடன், இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 25.9 சதவீத வளர்ச்சியாகும்.
வருடாந்த வரி வருமான இலக்கு 4.91 டிரில்லியன் ரூபாவாகும் என்பதுடன், முதல் ஆறு மாதங்களில் அதில் 55.2 சதவீதத்தை அரசாங்கம் எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே