தனியார் பஸ்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள சிரமம்: பேருந்து சேவை முற்றாக தடைப்படும் என எச்சரிக்கை

Prathees
4 years ago
தனியார் பஸ்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள சிரமம்: பேருந்து சேவை முற்றாக தடைப்படும் என எச்சரிக்கை

பொது போக்குவரத்தில் பயணிக்கும் தனியார் பஸ்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வது நெருக்கடியாக மாறியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக இலங்கை முழுவதும் 25 முதல் 35 வீதமான தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். 

பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் டீசல் தீர்ந்து வருவதாகவும், பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

ஓரிரு நாட்களில் நிலைமைக்கு தீர்வு காணப்படாவிட்டால் பேருந்து சேவை முற்றாக தடைப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4