ஐரோப்பிய யூனியன் கவுன்சிலில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ரஷியா

Keerthi
2 years ago
ஐரோப்பிய யூனியன் கவுன்சிலில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ரஷியா

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. 

அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. 

இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் ஐரோப்பிய யூனியன் கவுன்சிலில் இருந்து ரஷியா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. 

47 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய யூனியன் கவுன்சிலில் ரஷியாவும் அங்கமாக உள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு மனித உரிமைகள், ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் உலக அளவில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதற்கு எதிர்ப்பு நடவடிக்கையாக ஐரோப்பிய யூனியன் கவுன்சில் இருந்து ரஷியா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.