ரஷ்யா - உக்ரேன் மோதல்; இலங்கை தேயிலை ஏற்றுமதிக்கு பாதிப்பு

Mayoorikka
2 years ago
ரஷ்யா - உக்ரேன் மோதல்; இலங்கை தேயிலை ஏற்றுமதிக்கு பாதிப்பு

இலங்கையில் இருந்து தேயிலையை அதிகளவில் கொள்வனவு செய்யும் ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையில் தற்போது நிலவும் யுத்த சூழ்நிலையினால் இலங்கை தேயிலை தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 வருடமொன்றுக்கு ரஷ்யா சராசரியாக 25 முதல் 30 மில்லியன் கிலோகிராம் தேயிலையை கொள்வனவு செய்கின்றது. அத்துடன், கடந்த ஜனவரி மாதத்தில் இரண்டு மில்லியன் கிலோ கிராமுக்கு மேல்  ரஷ்யாவுக்கு தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டதாக  அந்த அதிகாரி கூறியுள்ளார்.

போர் தொடங்குவதற்கு முன்பே ரஷ்யா கோரிய தேயிலையை அனுப்பியுள்ளதாக கூறிய அந்த அதிகாரி, ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே போர் மேலும் அதிகரித்தால் புதிய கொள்வனவு கோரிக்கைகள் குறைவடையும் என்றும் சுட்டிக்காட்டினார்.