எம்.பி ஹரினின் சந்தேகத்திற்கிடமான பார்சல் வழக்கை விசாரிக்க சிறப்புக் குழு

Prathees
2 years ago
எம்.பி ஹரினின் சந்தேகத்திற்கிடமான பார்சல் வழக்கை விசாரிக்க சிறப்புக் குழு

சமகி ஜன பலவேகே பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோஇ பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்தியதுடன்இ சந்தேகத்திற்கிடமான பார்சலை பலவந்தமாக பாராளுமன்ற வளாகத்திற்குள் கொண்டு வந்தமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழுவிடம் விசாரணையை ஒப்படைக்கவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாளை (3) நடைபெறவுள்ள பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவில் இவ்விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என  தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்திற்கு கடந்த 24ஆம் திகதி சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்று கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தி உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன, அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட அரசாங்க உறுப்பினர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு அவ்வாறான முறைப்பாடு செய்ய முடியாது என பாராளுமன்ற அதிகாரிகள் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அப்போது இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிறப்புரிமைக் குழுவிடம் ஒப்படைக்க சபாநாயகர் முடிவு செய்தார்.

மின்வெட்டுக்கு எதிராக கடந்த 24 ஆம் திகதி சமகி ஜன பலவெவ கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தீபம் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அன்றைய தினம் குறித்த சந்தேகத்திற்கிடமான பார்சல் பாராளுமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.