உண்மையான போராக மாறும் - பிரான்ஸ் க்கு ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கை

Nila
2 years ago
உண்மையான போராக மாறும் - பிரான்ஸ் க்கு ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கை

உக்ரைனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில், ‘பொருளாதாரப் போர்கள் உண்மையான போர்களாக மாறும்’ என்று முன்னாள் ரஷிய அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் பிரான்சை எச்சரித்துள்ளார். முன்னாள் ரஷிய அதிபரும், ரஷியாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வடேவ் 2008 முதல் 2012 வரை ரஷியாவின் அதிபராகவும், 2012 முதல் 2020 வரை பிரதமராகவும் இருந்தவர்.

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் மீது 6-வது நாளாக போர் தாக்குதலை தொடுத்து வருகிறது.

இந்நிலையில், முன்னதாக பிரெஞ்சு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது, பிரெஞ்சு நிதியமைச்சர் புருனோ லு மைரே, "நாங்கள் ரஷிய பொருளாதாரத்தின் வீழ்ச்சியைக் கொண்டு வருவோம்," என்று கூறியிருந்தார்.

அவர் கூறிய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  முன்னாள் ரஷிய அதிபர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “ரஷியா மீது பொருளாதாரப் போரை அறிவித்ததாக பிரான்ஸ் மந்திரி கூறியுள்ளார். மனித வரலாற்றில், பொருளாதாரப் போர்கள் பெரும்பாலும் உண்மையான போராக மாறியது என்பதை மறந்துவிடாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், உக்ரைனின் ஜெலென்ஸ்கியுடன் ரஷிய அதிபர் புடின் பேசும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று ரஷிய அதிபர் மாளிகை கிரெம்ளின் கூறியது குறிப்பிடத்தக்கது.