மத்திய வங்கியால் டொலர்களை உருவாக்க முடியாது! 6 மாதங்களுக்கு முன்னரே அரசிடம் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது: கப்ரால்

Prathees
2 years ago
 மத்திய வங்கியால் டொலர்களை உருவாக்க முடியாது! 6 மாதங்களுக்கு முன்னரே  அரசிடம் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது: கப்ரால்

6 மாதங்களாகஇது கடைசியாக வந்த எண்ணெய்க் கப்பலுக்கு டொலர்களைக் கொடுப்பது பற்றிய பிரச்சினையல்ல,  இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இலங்கை மத்திய வங்கி சுமார் ஆறு மாதங்களாக அரசாங்கத்திடம் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்து வருகிறது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்  தெரிவித்தார். 

நேற்று ஊடகமொன்றின் கேள்விக்குப்பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மத்திய வங்கியினால் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது புதிய அந்நிய செலாவணியை நாட்டிற்கு வரவழைப்பதற்கும் நாட்டில் தற்போதுள்ள அந்நிய செலாவணி வளங்களைப் பாதுகாப்பதற்கும் உதவும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.

இது ஒரு எண்ணெய் கப்பலுக்கு டொலர்களை செலுத்துவதற்கான கேள்வி மட்டுமல்லஇ" என்று அவர் கூறினார். இது ஒரு தொடர் கேள்வி.

இந்த கேள்விக்கான பதில் எண்ணெய் கப்பலில் இல்லை.  அதற்கு நாம் விடை காண வேண்டும். இது ஒரு ஆழமான கேள்வி.

இப்பிரச்சினை குறித்து ஆறு மாதங்களாக அரசுக்கு தெரிவித்து தேவையான தீர்வுகளை கேட்டு வருகிறோம்.

எனவே, கடைசி எண்ணெய் கப்பலைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை, ”என்று அவர் கூறினார்.

இந்த கடினமான காலங்களில் டொலர்கள் தேவைப்பட்டால், டொலர்களை உருவாக்க நாம் உழைக்க வேண்டும்

அதில் எதையும் செய்யாமல் டொலர்கள் உருவாக்கப்பட மாட்டாது என மத்திய வங்கியின் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

‘எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டு ஆறு மாதங்களாகின்றன. எண்ணெய் விலை அதிகரித்தால், குறைந்தபட்சம் எண்ணெய் நுகர்வு குறையும்.

அப்போது எண்ணெய்யின் டொலர் விலை குறையும். அவை செய்யப்பட வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.