அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதில் சிக்கல் - மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம்

#SriLanka #drugs
அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதில் சிக்கல் - மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதில் சி்க்கல் ஏற்பட்டுள்ளது. இது தவிர நிறுவனங்கள் தங்களது நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் பல சிக்கல்களை எதிரி்நோக்கியுள்ளதன் விளைவாக, விநியோகஸ்தர்கள் தொடர்ந்தும் இலங்கைக்ககு மருந்துகளை வழங்குவதில் ஆர்வம் காட்டவில்லை என்று இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளன அதிகாரிகள் அத்தியாவசிய மருந்துகளில் தற்போதைய பற்றாக்குறையை உறுதிப்படுத்தியுள்ளதுடன், மேலும் அத்தியாவசிய மருந்துகள் உட்பட விநியோக நடவடிக்கைகளை முன்னோக்கி நகர்த்துவது குறித்து பல சிலக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

விநியோகத்தின் போது ஏற்படும் சவால்கள் மற்றும் அதிகரித்து வரும் மூலப்பொருட்களின் விலைகள் போன்ற உலகளாவிய பிரச்சினைகளால் மருந்துத் தொழிற்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் தற்போதைய அத்தியாவசிய மருந்துப் பற்றாக்குறையை பாதிக்கும் இரண்டு முக்கிய காரணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழ நிர்ணயித்துள்ள உண்மைக்கு மாறான விலைக் கட்டுப்பாடுகள் காரணமாக, அத்தியாவசிய மருந்துகளின் விநியோகத்தினை தற்போது கைவைக்க முடியாமலிருப்பதாக மருந்துத்துறை குறிப்பிட்டுள்ளது. அனைத்து அத்தியாவசிய மருந்துகளும் 2016 ஒக்டோபர் முதல் விலைக்கட்டுப்பாட்டின் கீழ் உள்ளமைக்கு காரணம் வெளிப்படையன மற்றும் செயல்படக்கூடிய முறையான விலை நிர்ணய வழிமுறை இல்லாத காரணத்தினால் ஆகும்.

ஒரு நிலையான விலை நிர்ணய பொறிமுறையானது பரிமாற்ற வீதம், எரிபொருள் செலவுகள் வட்டி மற்றும் பணவீ்க்கம் போன்ற முக்கிய உள்ளீட்டு செலவுகளை சரிசெய்ய உதவும். தொழில்துறை மற்றும் நோயாளர் ஆகிய இரண்டிற்கும் நிலைாயான விலை நிர்ணய பொறிமுறையை நிறுவுமாறு நீதிமன்றத்தால் தேசிய மருந்துகள் ஒழுங்கு முறை ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் கணிசமான காலத்திற்கு கிடைக்கும் தயாரிப்பு பதிவுகளை வழங்குவதில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் தேவையற்ற தாமதம் இருப்பதாக தொழில் துறை மேலும் குறிப்பிட்டது,

ஒழுங்கு முறைக்கட்டணங்கள் சராசரியாக 11 மடங்கு அதிகரித்துள்ளதால், சீரான சேவை எதிர்பார்த்ததை விடக் குறைவாக உள்ளது. தயாரிப்பு பதிவு ஒப்புதல்கள் மற்றும் இறக்குமதி உரிமங்களை வழங்குவதற்கான ஆவணங்களை செயலாக்குவதில் கடுமையான தாமதம் உள்ளது என்றார்.