இலங்கையில் மக்கள் எதற்காக கஸ்டப்படவேண்டும்....?

Lanka4
2 years ago
இலங்கையில் மக்கள் எதற்காக கஸ்டப்படவேண்டும்....?

அண்மைக் காலமாக எரிவாயு தட்டுப்பாடும் அத்தியாவசியப் பொருட்களின் அதிவேக விலையேற்றமும் மின்சார துண்டிப்பும் இலங்கையில் பாரிய பிரச்சினையாக உள்ளது.

அதனால் பொருளாதார நெருக்கடி நிலைமை மோசமாகி அமைச்சரவையில் கூட மாற்றங்களைக் கொண்டுவரும் அளவிற்கு பாரிய பிரச்சினையாகவே உள்ளது.

ஆனாலும் இலங்கை மக்கள் இதற்காக ஏன் அவதியுற வேண்டுமென்பதே எமது கருத்து....

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் என்பதனால் மக்கள் சிரமத்திற்கு அதிலும் குறிப்பாக வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்கள் வேணுமானால் அவதிக்குள்ளாகலாம். அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்னவழி என அல்லாடலாம். ஆனால் ஏனையோருக்கு இது ஒரு பிரச்சினையாகவே இல்லை.

ஏனெனில் காலம்காலமாக இத் தொழினுட்ப வளர்சிக்கு முறபட்ட காலத்தில் இருந்து நாங்கள் எப்படி எல்லாம் வாழ்ந்தோமோ அப்படியே வாழலாம். ஏன் வாழ முடியாது...

எரிவாயு கொண்டுதான் நாம் எல்லாம் சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தோமா.. இல்லை எரிசக்தி வெளிச்சத்தில் தான் எமது கல்வியை ஒளிமயமாக்கினோமா.. 

ஐயோ இலங்கையில் கரன்ட் இல்ல்லை காஸ் இல்லை என துன்பப்படும் நம் மக்களுக்கு ஓர் வேண்டுகோள்....

நாம் நினைத்தால் சந்தோசமாகவே வாழலாம். இலங்கைப் பிரச்சினை அது அரச பிரச்சினை. நீங்கள் பழைய வாழ்க்கையில் எவ்வாறு வாழ்ந்தீர்களோ அவ் வாழ்க்கைக்கு பழகிக்கொள்ளுங்கள். அப்போதுதான் இலங்கை அரசு ஒரு உடன்பாட்டுக்கு வரும். அதாவது நாடு ஒரு பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி முன்னகர்ந்து ஏனைய நாடுகளோடு ஒரு இணக்கத்திற்கு வரும்.

அதைவிட்டு, மக்களாகிய நாமும் எரிவாயு விலையேறினாலும் பரவால்லை கடன்பட்டாவது அதனை வாங்கணும் என நினைப்பதும், எவ்வளவுதான் மின்கட்டணம் அதிகரித்தாலும் பரவாயில்லை நமக்கு 24 மணிநேரமும் எரிசக்தி வேணும் என நினைப்பதாலுமே அரசு இவ்வாறான விலையேற்றத்தை மக்களுக்கு திணிக்கின்றது என்பதனை மறவாதீர்கள்.

மக்கள் தான் அரசு. மக்கள் இல்லையேல் அரசு இல்லை என்பதனை மறந்து செயற்பட்டால் அரசுக்கு கொண்டாட்டம் மக்களுக்கு திண்டாட்டம்.

சவர்க்காரம் இல்லாத காலத்திலும் மண்ணெண்ணெய் இல்லாத காலத்திலும் கார், மோட்டார்சைக்கிள் இல்லாத காலத்திலும் நாம் வாழ்ந்தோம் என்பதனை மறக்காதீர்கள். எரிவாயுவிற்கு பதில் விறகு பயன்படுத்தித்தானே சமைத்தோம். ஒரு திரியும் பற்றவைக்க நெருப்பும் இருந்தாலே வ்போதும் வெளிச்சத்திற்கு. உண்மையில் வாழத்தெரிந்தவர்களுக்கு இது புரியும்.

அதைவிட்டு அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய மோட்டார்சைக்கிளுக்கு எரிபொருள் இல்லையே தட்டுப்பாடு ஏற்படுதே, விலை அதிகரித்துவிட்டதே என புலம்புவதை சற்று நிறுத்துங்கள்.

வாழ நினைத்தால் வாழலாம்... வழியா இல்லை பூமியில்....! என்பதற்கிணங்க உங்களுக்கக ஒவ்வொருத்தரும் வாழ நினையுங்கள்.. அடுத்தவனின் பார்வைக்காக பெருமைப்பட்டு வாழ நினைக்காதீர்கள். 

தற்போதும் கூட இலங்கையில் சிற்சில குக்கிராமங்களில் எரிசக்தி பெற்றுக்கொள்ளாத பகுதிகள் இருக்கின்றன. எனவே அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றங்களுக்காக மட்டும் குரல்கொடுங்கள். அதைவிட்டு அதிவிலைகொடுத்து எரிவாயுவிற்கோ இல்லை எரிசக்திக்கோ எரிபொருளுக்காகவோ உங்களின் காலத்தை வீணடிக்காதீர்கள்.