INDvsSL Test - நாணய சுழற்சியில் இந்தியா வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

#Srilanka Cricket
Prasu
4 years ago
INDvsSL Test - நாணய சுழற்சியில் இந்தியா வெற்றிபெற்று  முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இந்த போட்டி மொஹாலியில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 300வது டெஸ்ட் போட்டி இதுவாகும்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலிக்கு இது 100வது டெஸ்ட் போட்டியாகும்.

தனது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்தியா அணி தற்போது 44வது ஓவர் நிறைவில் 170 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுகளை இழந்த நிலையில் விளையாடி  வருகிறது.

இந்தியா அணி சார்பில் தலைவர் ரோஹித் 29 ஓட்டங்களுக்கும் அகர்வால் 33 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர் .தனது 100வது போட்டியில் களமிறங்கிய முன்னாள் கேப்டன் கோலி 45 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் லஹிரு குமார 01 விக்கெட்டும் எம்புல்தேனிய 02 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர் .


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4