டொலர் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் எரிபொருள் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட அறிக்கை நகைப்புக்குரியது - போட்டுத் தாக்கும் விமல்

Prasu
2 years ago
டொலர் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் எரிபொருள் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச  வெளியிட்ட அறிக்கை நகைப்புக்குரியது - போட்டுத் தாக்கும் விமல்

"கடுமையான டொலர் தட்டுப்பாட்டுக்கு மத்தியில், எரிபொருள் நெருக்கடி தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச  வெளியிட்ட அறிக்கை நகைப்புக்குரியது; அது படுமுட்டாள்தனமானது."

 - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

"எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அமைச்சர்கள் அறிக்கை விட்டமையால், நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
 
இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் எரிபொருள் கையிருப்பு தீர்ந்துவிடும் என்ற அறிக்கைகளால் இந்தத்  தட்டுப்பாடு ஏற்படவில்லை.

வங்கிகளில் கடன் கடிதங்களை திறக்க முடியாவிட்டால், எரிபொருள் மற்றும் எரிவாயு தொகுதிகள் நாட்டுக்குள் நுழைய முடியாது.

டொலர் நெருக்கடியை நிராகரிக்கும் நபர்களின் அறிக்கைகள் மிகவும் தவறானவை" - என்றார்.