க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 60

#history #Article #Tamil People
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 60

பதின்மூன்றாவது அத்தியாயம் (க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத த்ரயோதஷோ அத்யாய:।

க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்

(மனிதனும் மறுபிறவியும்)

அர்ஜுன உவாச।
இதம் ஷரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபிதீயதே।
ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹு: க்ஷேத்ரஜ்ஞ இதி தத்வித:॥ 13.1 ॥

ஸ்ரீ பகவான் கூறினார்: அர்ஜுனா ! இந்த உடம்பு வீடு, இதை யார் அறிகிறானோ அவர் அதில் குடியிருப்பவன். உண்மையை உணர்ந்தவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.

ஸ்ரீபகவாநுவாச।
க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வக்ஷேத்ரேஷு பாரத।
க்ஷேத்ரக்ஷேத்ரயோர்ஜ்ஞாநம் யத்தஜ்ஜ்ஞாநம் மதம் மம॥ 13.2 ॥

அர்ஜுனா ! எல்லா வீடுகளிலும் குடியிருப்பவன் நான் என்று அறிந்துகொள். வீடு மற்றும் குடியிருப்பவனை பற்றிய அறிவே உண்மை அறிவு என்பது எனது கருத்து .

தத்க்ஷேத்ரம் யச்ச யாத்ருக்ச யத்விகாரி யதஷ்ச யத்।
ஸ ச யோ யத்ப்ரபாவஷ்ச தத்ஸமாஸேந மே ஷ்ருணு॥ 13.3 ॥

அந்த வீடு எது, எப்படிபட்டது, என்ன மாற்றங்களுக்கு உள்ளாவது எதிலிருந்து எது உண்டாகிறது, குடியிருப்பவன் யார், அவனது மகிமை என்ன ஆகியவற்றை சுருக்கமாக கூறுகிறேன் கேள்.

க்ருஷிபிர்பஹுதா கீதம் சந்தோபிர்விவிதை: ப்ருதக்।
ப்ரஹ்மஸூத்ரபதைஷ்சைவ ஹேதுமத்பிர்விநிஷ்சிதை:॥ 13.4 ॥

இந்த உண்மையை முனிவர்கள் பல வடிவ பாடல்களில் பல விதமாக பாடியுள்ளனர். காரண காரியங்களுடன் நிச்சயமான வகையில் அமைந்துள்ள பிரம்ம சூத்திரங்களிலும் இது ஆராயப்பட்டுள்ளது.

மஹாபூதாந்யஹம்காரோ புத்திரவ்யக்தமேவ ச।
இந்த்ரியாணி தஷைகம் ச பம்ச சேந்த்ரியகோசரா:॥ 13.5 ॥br>
இச்சா த்வேஷ: ஸுகம் து:கம் ஸம்காதஷ்சேதநா த்ருதி:।
ஏதத்க்ஷேத்ரம் ஸமாஸேந ஸவிகாரமுதாஹ்ருதம்॥ 13.6 ॥

மகா பூதங்கள், அகங்காரம், புத்தி, அவ்வியக்தம், பத்து கருவிகள், மனம், கருவிகளின் பொருட்கள் ஐந்து, விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம், உடம்பு, உணர்வு, மனஉறுதி ஆகிய மாறுபாடுகளுடன் கூடிய வீடுபற்றி இங்கே சுருக்கமாக சொல்லப்பட்டது.

அமாநித்வமதம்பித்வமஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம்।
ஆசார்யோபாஸநம் ஷௌசம் ஸ்தைர்யமாத்மவிநிக்ரஹ:॥ 13.7 ॥

தற்பெருமையின்மை, செருக்கின்மை, கொல்லாமை, பொறுமை, நேர்மை, குருசேவை, தூய்மை, விடாமுயற்சி, சுயகட்டுப்பாடு.

இந்த்ரியார்தேஷு வைராக்யமநஹம்கார ஏவ ச।
ஜந்மம்ருத்யுஜராவ்யாதிது:கதோஷாநுதர்ஷநம்॥ 13.8 ॥

போக பொருட்களில் நாட்டமின்மை, ஆணவமின்மை, பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய், துயரம் ஆகியவற்றின் கேடுகளை சிந்தித்தல்.

அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதாரக்ருஹாதிஷு।
நித்யம் ச ஸமசித்தத்வமிஷ்டாநிஷ்டோபபத்திஷு॥ 13.9 ॥

பற்றின்மை, மகன் மனைவி வீடு போன்றவற்றை தன்னுடையது என்று கருதாமல் இருப்பது, விரும்புவது விரும்பாதது எது நடந்தாலும் சமமாக ஏற்றுக்கொள்ளல்.

மயி சாநந்யயோகேந பக்திரவ்யபிசாரிணீ।
விவிக்ததேஷஸேவித்வமரதிர்ஜநஸம்ஸதி॥ 13.10 ॥

வேறு எதையும் நாடாமல் என்னிடம் மாறாத பக்தி கொள்ளல், தனியிடத்தை நாடுதல், மக்கள் கூட்டத்தை விரும்பாதிருத்தல்.

அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்த்வஜ்ஞாநார்ததர்ஷநம்।
ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநம் யததோ அந்யதா॥ 13.11 ॥

ஆன்ம உணர்வில் நிலைபெற்றிருத்தல், லட்சிய நாட்டம் ஆகியவை ஞானம் என்று சொல்லபடுகிறது. இதற்கு வேறானது அஞ்ஞானம்.

ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா அம்ருதமஷ்நுதே।
அநாதிமத்பரம் ப்ரஹ்ம ந ஸத்தந்நாஸதுச்யதே॥ 13.12 ॥

எதை அறிய வேண்டுமோ, எதை அறிந்தால் மரணமில்லா பெருநிலையை அடையலாமோ அதை சொல்கிறேன். அது ஆரம்பம் இல்லாதது, மேலானது, பெரியது, இருப்பது என்றோ இல்லாதது என்றோ சொல்ல முடியாது.

ஸர்வத: பாணிபாதம் தத்ஸர்வதோ அக்ஷிஷிரோமுகம்।
ஸர்வத: ஷ்ருதிமல்லோகே ஸர்வமாவ்ருத்ய திஷ்டதி॥ 13.13 ॥

அந்த பரம்பொருள் எங்கும் கைகள், கால்கள், கண்கள், தலைகள், வாய்கள், காதுகளை உடையவர். அவர் உலகில் எல்லாவற்றிலும் நிறைந்து நிற்கிறார்.

ஸர்வேந்த்ரியகுணாபாஸம் ஸர்வேந்த்ரியவிவர்ஜிதம்।
அஸக்தம் ஸர்வப்ருச்சைவ நிர்குணம் குணபோக்த்ரு ச॥ 13.14 ॥

அவர் எல்லா புலன்களையும் இயங்க செய்கிறார் ஆனால் அவர் எந்த புலன்களும் இல்லாதவர், பற்றற்றவர், ஆனால் அனைத்தையும் தாங்குகிறார். குணமே இல்லாதவர் ஆனால் எல்லா குணங்களையும் அனுபவிக்கிறார்.

பஹிரந்தஷ்ச பூதாநாமசரம் சரமேவ ச।
ஸூக்ஷ்மத்வாத்ததவிஜ்ஞேயம் தூரஸ்தம் சாந்திகே ச தத்॥ 13.15 ॥

அவர் பொருட்களுக்கு வெளியிலும் உள்ளேயும் இருக்கிறார். அசையாததும் அசைவதுமாகிய பொருட்கள் எல்லாம் அவரே, நுண்மையாக இருப்பதால் அவர் அறியபட முடியாதவர். அவர் தூரத்தில் இருக்கிறார். அருகிலும் இருக்கிறார்.

அவிபக்தம் ச பூதேஷு விபக்தமிவ ச ஸ்திதம்।
பூதபர்த்ரு ச தஜ்ஜ்ஞேயம் க்ரஸிஷ்ணு ப்ரபவிஷ்ணு ச॥ 13.16 ॥

அறியப்பட வேண்டிய அந்த பரம்பொருள் பிரிவுபடாதவர். பொருட்களில் பிரிவுபட்டது போல் தோன்றுகிறார். பொருட்களை தோற்றுவிப்பதும், தாங்குவதும், தன்னுள்கொள்வதும் அவரே.

ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ்தமஸ: பரமுச்யதே।
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநகம்யம் ஹ்ருதி ஸர்வஸ்ய விஷ்டிதம்॥ 13.17 ॥

அந்த இறைவன் ஒளிகளுக்கெல்லாம் ஒளியாக இருக்கிறார். அவர் இருளுக்கு அப்பாற்பட்டவர், அவரே ஞானம், அறியபடவேண்டியவர், எல்லோருடைய இதயத்திலும் நிலைத்திருப்பவர்.

இதி க்ஷேத்ரம் ததா ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸநாஸத:।
மத்பக்த ஏதத்விஜ்ஞாய மத்பாவாயோபபத்யதே॥ 13.18 ॥

இவ்வாறு வீடும், ஞானமும், அறியபடவேண்டிய பொருளும் பற்றி சுருக்கமாக கூறப்பட்டது. என் பக்தன் இதை அறிந்து, என் நிலைக்கு தகுதி ஆகிறான்.

ப்ரக்ருதிம் புருஷம் சைவ வித்யநாதி உபாவபி।
விகாராம்ஷ்ச குணாம்ஷ்சைவ வித்தி ப்ரக்ருதிஸம்பவாந்॥ 13.19 ॥

இயற்கை, இறைவன் இரண்டிற்கும் ஆரம்பம் கிடையாது. மாற்றங்களும் குணங்களும் இயற்கையிலிருந்து பிறந்தவை என்பதை அறிந்து கொள்.

கார்யகாரணகர்த்ருத்வே ஹேது: ப்ரக்ருதிருச்யதே।
புருஷ: ஸுகது:காநாம் போக்த்ருத்வே ஹேதுருச்யதே॥ 13.20 ॥

உடம்பையும் புலன்களையும் உண்டாக்குவதில் இயற்கை காரணம் என்று சொல்லபடுகிறது. சுக துக்கங்களை அனுபவிப்பதில் ஜீவன் காரணம் என்று சொல்லபடுகிறது.

புருஷ: ப்ரக்ருதிஸ்தோ ஹி புங்க்தே ப்ரக்ருதிஜாந்குணாந்।
காரணம் குணஸங்கோ அஸ்ய ஸதஸத்யோநிஜந்மஸு॥ 13.21 ॥

இயற்கையை சேர்ந்தவனான ஜீவன், இயற்கையிலிருந்து தோன்றிய குணங்களை அனுபவிக்கிறான். குணங்களின் மீதுள்ள பற்றுதலே அவனது நல்ல தீய பிறவிகளுக்கு காரணமாகிறது.

உபத்ரஷ்டாநுமந்தா ச பர்தா போக்தா மஹேஷ்வர:।
பரமாத்மேதி சாப்யுக்தோ தேஹே அஸ்மிந்புருஷ: பர:॥ 13.22 ॥

இந்த உடம்பில் உள்ள ஆன்மா சாட்சி, அனுமதிப்பவர், தாங்குபவர், அனுபவிப்பவர், மேலான தலைவர், பரம்பொருள், கடவுள் என்றெல்லாம் சொல்லபடுகிறது.

ய ஏவம் வேத்தி புருஷம் ப்ரக்ருதிம் ச குணை: ஸஹ।
ஸர்வதா வர்தமாநோ அபி ந ஸ பூயோ அபிஜாயதே॥ 13.23 ॥

ஆன்மாவையும், குணங்களுடன் கூடிய இயற்கையையும் யார் இவ்வாறு அறிகிறானோ, அவன் எவ்வாறு வாழ்பவனாக இருந்தாலும் மீண்டும் பிறப்பதில்லை.

த்யாநேநாத்மநி பஷ்யந்தி கேசிதாத்மாநமாத்மநா।
அந்யே ஸாங்க்யேந யோகேந கர்மயோகேந சாபரே॥ 13.24 ॥

சிலர் தியானத்தின் மூலம் தெளிந்த புத்தியால் ஆன்மாவை உள்ளத்தில் காண்கிறார்கள். சிலர் ஞான யோகத்தினாலும் சிலர் கர்ம யோகத்தினாலும் காண்கிறார்கள்.

அந்யே த்வேவமஜாநந்த: ஷ்ருத்வாந்யேப்ய உபாஸதே।
தே அபி சாதிதரந்த்யேவ ம்ருத்யும் ஷ்ருதிபராயணா:॥ 13.25 ॥

இன்னும் சிலரோ இவ்வாறு அறியாதவர்கள், ஆனால் பிறரிடமிருந்து கேட்டு வழிபடுகின்றனர். கேட்டதில் முழு மனத்துடன் சாதனைகளில் ஈடுபடுகின்ற அவர்களும் மரணத்தை நிச்சயமாக கடக்கின்றனர்.

யாவத்ஸம்ஜாயதே கிம்சித்ஸத்த்வம் ஸ்தாவரஜங்கமம்।
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞஸம்யோகாத்தத்வித்தி பரதர்ஷப॥ 13.26 ॥

பரத குலத்தில் சிறந்தவனே ! அசையாததும் அசைவதுமாகிய எந்த பொருள் தோன்றியிருந்தாலும், அது வீடு மற்றும் குடியிருப்பவன் இரண்டின் சேர்க்கையாலேயே தோன்றியுள்ளது என்று அறிந்து கொள்.

ஸமம் ஸர்வேஷு பூதேஷு திஷ்டந்தம் பரமேஷ்வரம்।
விநஷ்யத்ஸ்வவிநஷ்யந்தம் ய: பஷ்யதி ஸ பஷ்யதி॥ 13.27 ॥

எல்லா உயிரினங்களிலும் சமமாக உறைபவரும், அழிகின்ற பொருட்களுக்குள் அழியாமல் இருப்பவரும் ஆகிய மேலான இறைவனை யார் காண்கிறானோ அவனே காண்கிறான்.

ஸமம் பஷ்யந்ஹி ஸர்வத்ர ஸமவஸ்திதமீஷ்வரம்।
ந ஹிநஸ்த்யாத்மநாத்மாநம் ததோ யாதி பராம் கதிம்॥ 13.28 ॥

எங்கும் சமமாக நிறைந்து இருக்கின்ற இறைவனை காண்பவன் தன்னால் தன்னை அழித்துகொல்வதில்லை. அதனால் மேலான கதியை அடைகிறான்.

ப்ரக்ருத்யைவ ச கர்மாணி க்ரியமாணாநி ஸர்வஷ:।
ய: பஷ்யதி ததாத்மாநமகர்தாரம் ஸ பஷ்யதி॥ 13.29 ॥

எல்லா செயல்களும் இயற்கையினாலேயே செய்யபடுகின்றன என்றும் இறைவன் தன்முனைப்பற்றவர் என்றும் யார் காண்கிறானோ அவனே காண்கிறான்.

யதா பூதப்ருதக்பாவமேகஸ்தமநுபஷ்யதி।
தத ஏவ ச விஸ்தாரம் ப்ரஹ்ம ஸம்பத்யதே ததா॥ 13.30 ॥

பல்வேறு உயிரினங்கள் ஒன்றில் இருப்பதையும் அந்த ஒன்றில் இருந்தே அவை அனைத்தும் விரிந்து வெளிபடுவதையும் எப்போது ஒருவன் காண்கிறானோ அப்போது அவன் இறைநிலையை அடைகிறான்.

அநாதித்வாந்நிர்குணத்வாத்பரமாத்மாயமவ்யய:।
ஷரீரஸ்தோ அபி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே॥ 13.31 ॥

குந்தியின் மகனே ! ஆதி இல்லாததாலும் குணங்கள் இல்லாததாலும் அழிவற்ற இறைவன் இந்த உடம்பில் இருந்தாலும் செயல் புரிவதில்லை. பற்று கொல்வதும் இல்லை.

யதா ஸர்வகதம் ஸௌக்ஷ்ம்யாதாகாஷம் நோபலிப்யதே।
ஸர்வத்ராவஸ்திதோ தேஹே ததாத்மா நோபலிப்யதே॥ 13.32 ॥

எங்கும் பரந்துள்ள ஆகாசம் நுண்மை காரணமாக எப்படி எதனாலும் பாதிக்கபடுவதில்லையோ அப்படியே உடம்பு முழுவதும் நிறைந்துள்ள ஆன்மாவும் பாதிக்கபடுவதில்லை.

யதா ப்ரகாஷயத்யேக: க்ருத்ஸ்நம் லோகமிமம் ரவி:।
க்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா க்ருத்ஸ்நம் ப்ரகாஷயதி பாரத॥ 13.33 ॥

அர்ஜுனா ! ஒரே சூரியன் இந்த உலகம் முழுவதையும் எப்படி ஒளிர செய்கிறானோ, அப்படியே குடியிருப்பவனாகிய இறைவன் உடம்பு, உயிர், மனம் அனைத்தையும் இயங்க செய்கிறான்

க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோரேவமந்தரம் ஜ்ஞாநசக்ஷுஷா।
பூதப்ரக்ருதிமோக்ஷம் ச யே விதுர்யாந்தி தே பரம்॥ 13.34 ॥

இவ்வாறு, வீடு மற்றும் குடியிருப்பவனுக்கு இடையிலுள்ள வேறுபாட்டையும் மக்கள் இயற்கையின் பிடியிலிருந்து விடுதலை பெறுவதையும் ஆன்மீக அனுபூதியின் வாயிலாக யார் உணர்கிறார்களோ, அவர்கள் மேலான நிலையை அடைகிறார்கள்.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாகயோகோ நாம த்ரயோதஷோ அத்யாய:॥ 13 ॥

ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்' எனப் பெயர் படைத்த பதின்மூன்றாவது அத்தியாயம் நிறைவுற்றது.

தொடரும்...

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!