இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக ஜயந்த சமரவீர அறிவிப்பு: காரணம் இதுதான்!

Prathees
2 years ago
 இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக ஜயந்த சமரவீர அறிவிப்பு: காரணம் இதுதான்!

இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர, இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நேற்று (08) இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்இ தனது பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (07) முதல் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்க உதவிய 69 இலட்சம் வரலாற்று மக்களுக்கும் எமது நாட்டுக்கும் மக்களுக்கும்.

பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை உருவாக்குவதற்காக ஆகஸ்ட் 05 ஆம் திகதி வழங்கப்பட்ட விசேட ஆணையிற்கும் எமது அரசாங்கத்திற்கும் விரோதமான ஒரு தீய சதி இத்தருணத்தில் அரங்கேறி வருகின்றது.

இன்று நமது நாடு அதன் வரலாற்றில் மிக ஆழமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

அனைத்து இலங்கையர்களும் நெருக்கடியான சூழலில் உள்ளனர்.

குழந்தைகளுக்கு உணவளிக்காமல் தந்தைகள் தற்கொலை செய்துகொள்வது முதல் எரிபொருளுக்காக வரிசையில் நிற்கும் மக்கள் வரை, கிராமப்புற டீக்கடைகள் முதல் நகர உணவகங்கள் வரை எரிவாயு பற்றாக்குறையால் மூடப்படும் பெரிய அளவிலான ஹோட்டல்கள் வரை.

தொழிலதிபர்கள் தமது தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கடன் கடிதங்களை வழங்க முடியாத நிலையை இன்று எமது நாடு எதிர்கொண்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.