துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் 2,500 கொள்கலன்கள் !

Prabha Praneetha
2 years ago
துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் 2,500 கொள்கலன்கள் !

டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 2,500 கொள்கலன்கள், தொடர்ந்தும் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக இறக்குமதியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

டொலர் இன்மையால் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சீனி, கோதுமை மா, கடலை, பருப்பு உள்ளிட்ட பல உணவு பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் இவ்வாறு கொழும்புத் துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்றன

கடந்த காலத்தில் இடைக்கிடையே டொலர் கிடைக்கப்பெற்ற போதிலும், தற்போது வங்கிகளிடமிருந்து டொலர் கிடைக்கப் பெறுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் டொலருக்கான ரூபாயின் பெறுமதி 230 ரூபாய் வரை அதிகரித்துள்ள நிலையில் எதிர்காலத்தில் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அதிக பணம் செலவிட வேண்டியுள்ளது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.