எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாடு தொடருமாயின் மக்கள் வீதியில் இருக்க வேண்டிய நிலைமையே ஏற்படும்!

Mayoorikka
2 years ago
எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாடு தொடருமாயின் மக்கள் வீதியில் இருக்க வேண்டிய நிலைமையே ஏற்படும்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டுன் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாடும் தொடரும் எனில் நாட்டு மக்களுக்கு வீதியில் இருக்க வேண்டிய நிலைமையே ஏற்படும் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (9) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் நாட்டுமக்கள் பாரிய சிறமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

பாராளுமன்றம் அமைந்துள்ள பகுதிகளிலுள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்டவரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!