பிரபல இசையமைப்பாளர் மீது அத்துமீறல் குற்றச்சாட்டு: பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் பகிரங்க முறைப்பாடு!

#Cinema #Complaint #ImportantNews #Public #Music #Singer #L4
Lakhi
1 hour ago
பிரபல இசையமைப்பாளர் மீது அத்துமீறல் குற்றச்சாட்டு: பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் பகிரங்க முறைப்பாடு!

தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபல பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், இசையமைப்பாளர் ஒருவர் மீது சுமத்தியுள்ள பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு திரை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. யூடியூப் தளம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியின் போதே அவர் இந்த திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னர், சம்பந்தப்பட்ட இசையமைப்பாளரின் கலையகத்தில் இந்த அத்துமீறல் இடம்பெற்றதாக ஸ்வாகதா தெரிவித்துள்ளார். குறிப்பாக, கடவுளின் பெயரைச் சொல்லியே அந்த இசையமைப்பாளர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சிசிடிவி பொருத்தப்பட்ட அறையிலேயே இந்தச் சம்பவம் நடந்ததாகவும், அந்த சிசிடிவி காட்சிகளை வைத்தே தன்னை அந்த இசையமைப்பாளர் மிரட்டியதாகவும் பாடகி சுட்டிக்காட்டியுள்ளார். 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ஆரம்பத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுகளை வென்றவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது பல வெற்றிப் பாடல்களை வழங்கி வருவதுடன், தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் ஒரு இளநிலை இசையமைப்பாளர் இவரெனத் தெரிவிக்கப்படுகிறது.

 தன்னைப்போலவே இன்னும் பல பாடகிகள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஸ்வாகதா, தேவைப்பட்டால் அந்த இசையமைப்பாளரின் பெயரை பகிரங்கமாக வெளியிடத் தயாராக இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், குறித்த இசையமைப்பாளரின் கீழ் பல பாடல்களைப் பாடியுள்ள நிலையில், இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!