இங்கிலாந்து பொறியியலாளர் பென்னிகுக் கல்லறைக்கு அஞ்சலி செலுத்திய தமிழர்கள்

Nila
2 years ago
இங்கிலாந்து பொறியியலாளர் பென்னிகுக் கல்லறைக்கு  அஞ்சலி செலுத்திய தமிழர்கள்

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்வது முல்லைப்பெரியாறு அணை. தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த அணை ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில், இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக் தனது பெரும் முயற்சியால் கட்டினார். 


பென்னிகுவிக் லண்டனில் உள்ள தனது சொத்துக்களை விற்று தென்மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கவும், வறண்டு கிடந்த நிலங்கள் வளம் பெறவும் இந்த அணையை கட்டினார். இதனால், 'முல்லைப்பெரியாறு அணையின் தந்தை' என பென்னிகுவிக் அழைக்கப்படுகிறார்.

தேனி மாவட்ட மக்கள் சாதி, மதம் கடந்து பென்னிகுவிக்கை கடவுள்போல் வணங்கி வருகின்றனர். பென்னிகுவிக் பிறந்தநாளான ஜனவரி 15 தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் 'பென்னிகுவிக்' பொங்கல் என்ற பெயரில் பொங்கல் வைத்து மக்கள் வழிபடுகின்றனர். மேலும் பென்னிகுவிக் பிறந்தநாளை அரசு விழாவாகவும் தமிழக அரசு கொண்டாடி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 5ம் திகதி இங்கிலாந்தில் கேம்பர்லி நகர் செயின்ஸ் பீட்டர்ஸ் தேவாலயத்தில் அமைந்துள்ள பென்னிகுக் கல்லறையில் லண்டன் தமிழர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அந் நிகழ்வில் அகில உலக கம்பன் கழக தலைவரும், திருவள்ளுவர் சிலை அமைப்புக் குழுத் தலைவருமான சுவாமி சரஹணபவானந்தா, பிரீம்ளி கிரீன் கவுன்சிலர் சசி மயில்வாகனம், ராஜாங்கம், ரவி, சுரேஷ் கோவிந்தன், மற்றும் ஷாரேன், நெல்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சுவாமி சரஹணபவானந்தா பென்னிகுக் கல்லறையில் மலர்க்கொத்து வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் 111 வருட பழமையான கல்லறையை புதுப்பிக்க வேண்டி தேவாலய நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டார்.

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முல்லை பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் சிலை அவரது சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்லி நகரில் நிறுவப்படும்  என அறிவித்திருந்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பென்னிகுக் சிலை அவரின் சொந்த ஊரான கேம்பர்லியில் நிறுவ அறிவிப்பு வெளியிட்டிருந்ததையடுத்து, அந்த விழாவில் கலந்துகொள்ள இங்கிலாந்து மகாராணிக்கு அழைப்பு விடுத்தனர். 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை லண்டன்வாழ் தமிழரான உத்தமபாளையம் சந்தானபீர் ஒலி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!