பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுமா?

#SriLanka #Covid Vaccine #Covid 19
Nila
2 years ago
பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுமா?

பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களில் உண்மையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும் என இதுவரையில் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனாப் பெருந்தொற்றுத் தாக்கம் காரணமாக பாலியல் ரீதியான பலவீனம் ஏற்படப் போவதில்லை.

கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாலியல் ரீதியான பலவீனம் ஏற்படும் எனவும், குழந்தைப் பேறு தொடர்பான பிரச்சினை ஏற்படும் எனவும் ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மை இல்லை.

மக்கள் இவ்வாறான போலிப் பிரச்சாரங்களுக்கு ஏமாந்துவிடக் கூடாது.

அத்துடன் காலம் தாழ்த்தாது பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.