இலங்கையில் நீர் நிலைகளில் இருந்து வெளித்தெரியும் ஆலயங்கள்! காரணம் என்ன?

#SriLanka
Nila
2 years ago
இலங்கையில் நீர் நிலைகளில் இருந்து வெளித்தெரியும் ஆலயங்கள்! காரணம் என்ன?

நீர் மின் உற்பத்திக்காக நீர் வழங்கும் காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் உள்ள நீர்த்தேக்கத்தின் உயரம் 135 அடியாக காணப்பட்ட போதிலும் தற்போது நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 55 அடியினால் குறைந்துள்ளதாகவும் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணியின் போது நீரில் மூழ்கிய பழைய மஸ்கெலியா நகரிலுள்ள கோவில்கள், மற்றும் பள்ளிவாசல்களின் இடிபாடுகள் தற்போது நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதை அடுத்து தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் ஒரு இந்து கோவிலின் இடிபாடுகள் நீரில் மூழ்கியிருப்பதைக் கண்டுள்ளது.

லக்சபான, புதிய லக்சபான, பொல்பிட்டிய மற்றும் விமலசுரேந்திர நீர்மின் நிலையங்கள் இரண்டு நீர்த்தேக்கங்களிலிருந்தும் பெறப்படும் நீரிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.