ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரின் இலங்கை வருகை வெற்றியளித்ததா?

Mayoorikka
2 years ago
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரின் இலங்கை வருகை வெற்றியளித்ததா?

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இந்த ஆண்டு இலங்கையின் செயற்பாட்டுத் திட்டங்களுக்காக 2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை ஒதுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. 

வங்கியின் தலைவர் சத்சுகு அசகவா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) கடந்த வருடம் இலங்கைக்கு 750 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக வழங்கியது.

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்துள்ளார். கோவிட் தொற்றுநோயால் பின்னடைவைச் சந்தித்த நாட்டின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும் மனித மூலதனத்தின் வளர்ச்சிக்கும் உதவுவதாக அவர் கூறியுள்ளார்.

இக்கலந்துரையாடலின் போது, ​​பசுமை விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் கைத்தொழில் வலயங்களில் வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகியவற்றிற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 50ஆவது வருடாந்த மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 05ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது.