ஷ்ரத்தாத்ரயவிபாக யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 64
பதினேழாவது அத்தியாயம் (ஷ்ரத்தாத்ரயவிபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அத ஸப்ததஷோ அத்யாய:।
ஷ்ரத்தாத்ரயவிபாக யோகம்
(வாழ்க்கையின் மூன்று கோணங்கள்)
அர்ஜுன உவாச।
யே ஷாஸ்த்ரவிதிமுத்ஸ்ருஜ்ய யஜந்தே ஷ்ரத்தயாந்விதா:।
தேஷாம் நிஷ்டா து கா க்ருஷ்ண ஸத்த்வமாஹோ ரஜஸ்தம:॥ 17.1 ॥
அர்ஜுனன் கேட்டது : கிருஷ்ணா ! யார் சாஸ்திர விதிப்படி அல்லாமல், ஆனால் நம்பிக்கையுடன் வழிபடுகிறார்களோ அவர்களின் நிலை என்ன ? சத்வ குணமா ? ரஜோ குணமா ? தமோ குணமா ?
ஸ்ரீபகவாநுவாச।
த்ரிவிதா பவதி ஷ்ரத்தா தேஹிநாம் ஸா ஸ்வபாவஜா।
ஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ஷ்ருணு॥ 17.2 ॥
ஸ்ரீ பகவான் கூறினார்: மனிதர்களுக்கு இயல்பாக அமைந்துள்ள அந்த நம்பிக்கைகள் சாத்வீகம், ராஜசம், தாமசம் என்று மூன்று விதமாக உள்ளது. அதை கேள்.
ஸத்த்வாநுரூபா ஸர்வஸ்ய ஷ்ரத்தா பவதி பாரத।
ஷ்ரத்தாமயோ அயம் புருஷோ யோ யச்ச்ரத்த: ஸ ஏவ ஸ:॥ 17.3 ॥
அர்ஜுனா ! இயல்பிற்கு ஏற்பவே மனிதனின் நம்பிக்கைகள் அமைகின்றன. நம்பிக்கைகளின் விளைவே மனிதன். நம்பிக்கைகளே அவனை உருவாக்குகின்றன.
யஜந்தே ஸாத்த்விகா தேவாந்யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா:।
ப்ரேதாந்பூதகணாம்ஷ்சாந்யே யஜந்தே தாமஸா ஜநா:॥ 17.4 ॥
சாத்வீகர்கள் தேவர்களை வணங்குகிறார்கள். ராஜச இயல்பினர் யட்சர்களையும் ராட்சசர்களையும், தாமச இயல்பினர் ஆவிகளையும் பூதங்களையும் வழிபடுகிறார்கள்.
அஷாஸ்த்ரவிஹிதம் கோரம் தப்யந்தே யே தபோ ஜநா:।
தம்பாஹம்காரஸம்யுக்தா: காமராகபலாந்விதா:॥ 17.5 ॥
கர்ஷயந்த: ஷரீரஸ்தம் பூதக்ராமமசேதஸ:।
மாம் சைவாந்த:ஷரீரஸ்தம் தாந்வித்த்யாஸுரநிஷ்சயாந்॥ 17.6 ॥
கர்வமும் அகங்காரமும் காமமும் ஆசையும் தீவிரமாக செயல்படுகின்ற மூடர்கள், உடம்பில் இருக்கின்ற புலன்களையும் உடம்பில் உறைகின்ற என்னையும் துன்புறுத்தி, சாஸ்திரத்தில் விதிக்கபடாத கோரமான தவம் செய்கிறார்கள். அவர்கள் அசுர இயல்பினர் என்று அறிந்து கொள்.
ஆஹாரஸ்த்வபி ஸர்வஸ்ய த்ரிவிதோ பவதி ப்ரிய:।
யஜ்ஞஸ்தபஸ்ததா தாநம் தேஷாம் பேதமிமம் ஷ்ருணு॥ 17.7 ॥
எல்லோருக்கும் விருப்பமான உணவும் மூன்று வகைபடுகிறது. அவ்வாறே வழிபாடும் தவமும் தானமும் அவற்றின் வேற்றுமைகளை கேள்.
ஆயு:ஸத்த்வபலாரோக்யஸுகப்ரீதிவிவர்தநா:।
ரஸ்யா: ஸ்நிக்தா: ஸ்திரா ஹ்ருத்யா ஆஹாரா: ஸாத்த்விகப்ரியா:॥ 17.8 ॥
ஆயுள், அறிவு, வலிமை, ஆரோக்கியம், சுகம், சுறுசுறுப்பு ஆகியவற்றை வளர்க்கின்ற, சாறுமிக்க, மென்மையான, சத்துமிக்க, இனிய உணவு சாத்வீகர்களுக்குப் பிரியமானது.
கட்வம்லலவணாத்யுஷ்ணதீக்ஷ்ணரூக்ஷவிதாஹிந:।
ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து:கஷோகாமயப்ரதா:॥ 17.9 ॥
கசப்பு, புளிப்பு மற்றும் உவர்ப்பு சுவையுடையவை, சூட்டை உண்டாக்குபவை, காரமானவை, எரிச்சல் ஊட்டுபவை, தாகத்தை ஏற்படுத்துபவை, துக்கம், கவலை மற்றும் நோயை உண்டாக்குபவை – இத்தகைய உணவு ரஜோ குணத்தினருக்கு பிரியமானவை.
யாதயாமம் கதரஸம் பூதி பர்யுஷிதம் ச யத்।
உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜநம் தாமஸப்ரியம்॥ 17.10 ॥
நாட்பட்டது, இயற்கை சுவையை இழந்தது, துர்நாற்றம் உடையது, பழையது, எச்சில், தூய்மையற்றது – இத்தகைய உணவு தமோ குணத்தினருக்கு பிரியமானது.
அபலாங்க்ஷிபிர்யஜ்ஞோ விதித்ருஷ்டோ ய இஜ்யதே।
யஷ்டவ்யமேவேதி மந: ஸமாதாய ஸ ஸாத்த்விக:॥ 17.11 ॥
வழிப்பட்டேயாக வேண்டும் என்று மனத்தை உறுதிபடுத்தி கொண்டு, பலனை விரும்பாமல், சாஸ்திர விதிப்படி எந்த வழிபாடு செய்யபடுகிறதோ அது சாத்வீகமானது.
அபிஸம்தாய து பலம் தம்பார்தமபி சைவ யத்।
இஜ்யதே பரதஷ்ரேஷ்ட தம் யஜ்ஞம் வித்தி ராஜஸம்॥ 17.12 ॥
பரத குலத்தில் சிறந்தவனே ! பலனை விரும்பியோ, ஆடம்பரதிற்காகவோ செய்யபடுகின்ற, வழிபாடு ராஜசமானது என்று அறிந்து கொள்.
விதிஹீநமஸ்ருஷ்டாந்நம் மந்த்ரஹீநமதக்ஷிணம்।
ஷ்ரத்தாவிரஹிதம் யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே॥ 17.13 ॥
விதிப்படி அல்லாத, அன்னதானம் இல்லாத, மந்திரமின்ற செய்யபடுகின்ற, தட்சினை இல்லாத, சிரத்தையின்றி செய்யபடுகின்ற வழிப்பாட்டை தாமசம் என்று சொல்கிறார்கள்.
தேவத்விஜகுருப்ராஜ்ஞபூஜநம் ஷௌசமார்ஜவம்।
ப்ரஹ்மசர்யமஹிம்ஸா ச ஷாரீரம் தப உச்யதே॥ 17.14 ॥
தேவர், சான்றோர், குருமார், அறிஞர் போன்றோரை கௌரவிப்பது, சுத்தம், நேர்மை, பிரம்மசரியம், அஹிம்சை இவை உடலால் செய்யபடுகின்ற தவம்.
அநுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத்।
ஸ்வாத்யாயாப்யஸநம் சைவ வாங்மயம் தப உச்யதே॥ 17.15 ॥
பிறர் மனத்தை நோக செய்யாத, உண்மையான, இனிமையான,இதமான வார்த்தைகளை பேசுவதும், வேதம் ஓதுவதற்கு பயிற்சி செய்வதும் வாக்கினால் செய்யபடுகின்ற தவம்.
மந: ப்ரஸாத: ஸௌம்யத்வம் மௌநமாத்மவிநிக்ரஹ:।
பாவஸம்ஷுத்திரித்யேதத்தபோ மாநஸமுச்யதே॥ 17.16 ॥
மனத்தெளிவு, மென்மை, மௌனம், சுயகட்டுப்பாடு, தூயநோக்கம் இவை மன தவம் என்று சொல்லபடுகிறது.
ஷ்ரத்தயா பரயா தப்தம் தபஸ்தத்த்ரிவிதம் நரை:।
அபலாகாங்க்ஷிபிர்யுக்தை: ஸாத்த்விகம் பரிசக்ஷதே॥ 17.17 ॥
பலனை விரும்பாத, யோகத்தில் நிலைபெற்ற மனிதர்களால் மிகுந்த சிரத்தையுடன் இந்த மூன்று விதமான தவமும் செய்யப்படும் போது அது சாத்வீகமானது.
ஸத்காரமாநபூஜார்தம் தபோ தம்பேந சைவ யத்।
க்ரியதே ததிஹ ப்ரோக்தம் ராஜஸம் சலமத்ருவம்॥ 17.18 ॥
பாராட்டு, மதிப்பு, புகழ், இவற்றிற்காக ஆடம்பரத்துடன் செய்யபடுகின்ற தவம் ராஜசமானது. அது உறுதியற்றது. தற்காலிகமானது.
மூடக்ராஹேணாத்மநோ யத்பீடயா க்ரியதே தப:।
பரஸ்யோத்ஸாதநார்தம் வா தத்தாமஸமுதாஹ்ருதம்॥ 17.19 ॥
முட்டாள் தனத்தால் தன்னை துன்புருத்தியோ பிறரை அழிப்பதற்க்காகவோ செய்யபடுகின்ற தவம் தாமசம் என்று சொல்லபடுகிறது.
தாதவ்யமிதி யத்தாநம் தீயதே அநுபகாரிணே।
தேஷே காலே ச பாத்ரே ச தத்தாநம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம்॥ 17.20 ॥
கொடுப்பது கடமை என்று தகுந்த இடத்தில் தகுந்த வேளையில் தகுந்த நபருக்கு, பிரதியாக அவர் எதுவும் செய்யமாட்டார் என்று தெரிந்தும் செய்யபடுவது சாத்வீக தானம்.
யத்து ப்ரத்த்யுபகாரார்தம் பலமுத்திஷ்ய வா புந:।
தீயதே ச பரிக்லிஷ்டம் தத்தாநம் ராஜஸம் ஸ்ம்ருதம்॥ 17.21 ॥
பிரதி பலனை எதிர்பார்த்தோ, விளைவை உத்தேசித்தோ, வருத்ததுடனோ செய்யபடுவது ராஜச தானம்.
அதேஷகாலே யத்தாநமபாத்ரேப்யஷ்ச தீயதே।
அஸத்க்ருதமவஜ்ஞாதம் தத்தாமஸமுதாஹ்ருதம்॥ 17.22 ॥
தகாத இடத்தில் தகாத காலத்தில் தகாதவர்களுக்கு ஏனோதானோ என்றும் இகழ்ச்சியுடனும் கொடுக்கபடுவது தாமச தானம்.
ஓம்தத்ஸதிதி நிர்தேஷோ ப்ரஹ்மணஸ்த்ரிவித: ஸ்ம்ருத:।
ப்ராஹ்மணாஸ்தேந வேதாஷ்ச யஜ்ஞாஷ்ச விஹிதா: புரா॥ 17.23 ॥
“ஓம் தத் ஸத்” என்று இறைவன் மூன்று விதமாக அழைக்கபடுகிறார். அவரிலிருந்தே முற்காலத்தில் சான்றோர்கள் படைக்கபட்டனர். வேதங்களும் யாகங்களும் தோன்றின.
தஸ்மாதோமித்யுதாஹ்ருத்ய யஜ்ஞதாநதப:க்ரியா:।
ப்ரவர்தந்தே விதாநோக்தா: ஸததம் ப்ரஹ்மவாதிநாம்॥ 17.24 ॥
எனவே வேதங்களை பின்பற்றுபவர்கள் வழிபாடு, தானம், தவம் போன்ற கிரியைகளை சாஸ்திரங்களின் விதிப்படி செய்யும் போது “ஓம்” என்று உச்சரித்தே தொடங்குகிறார்கள்.
ததித்யநபிஸம்தாய பலம் யஜ்ஞதப:க்ரியா:।
தாநக்ரியாஷ்ச விவிதா: க்ரியந்தே மோக்ஷகாங்க்ஷிபி:॥ 17.25 ॥
மோட்சத்தை நாடுபவர்கள் யாகம்,தவம், தானம் போன்றவற்றை செய்யும் போது பலனை விரும்பாமல் “தத்” என்று உச்சரித்து செய்கிறார்கள்.
ஸத்பாவே ஸாதுபாவே ச ஸதித்யேதத்ப்ரயுஜ்யதே।
ப்ரஷஸ்தே கர்மணி ததா ஸச்சப்த: பார்த யுஜ்யதே॥ 17.26 ॥
அர்ஜுனா ! “ஸத்” என்ற சொல் உண்மை என்ற கருத்திலும், நன்மை என்ற கருத்திலும் வழங்கபடுகிறது.அவ்வாறே மங்களகரமான காரியங்களிலும் ஸத் என்ற சொல் உபயோகிக்கபடுகிறது.
யஜ்ஞே தபஸி தாநே ச ஸ்திதி: ஸதிதி சோச்யதே।
கர்ம சைவ ததர்தீயம் ஸதித்யேவாபிதீயதே॥ 17.27 ॥
வழிபாட்டிலும் தவத்திலும் தானத்திலும் நிலைத்திருப்பது ஸத் என்று சொல்லபடுகிறது. இறைவனுக்காக செய்யபடுகின்ற கர்மமும் “ஸத்” என்றே சொல்லபடுகிறது.
அஷ்ரத்தயா ஹுதம் தத்தம் தபஸ்தப்தம் க்ருதம் ச யத்।
அஸதித்யுச்யதே பார்த ந ச தத்ப்ரேப்ய நோ இஹ॥ 17.28 ॥
அர்ஜுனா ! சிரத்தை இல்லாமல் செய்த யாகமும், கொடுத்த தானமும் செய்த தவமும், மற்ற கர்மங்களும் “அஸத்” எனப்படும். அது இந்த உலகத்திற்கும் உதவாது. மேல் உலகத்திற்கும் உதவாது.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
ஷ்ரத்தாத்ரயவிபாகயோகோ நாம ஸப்ததஷோ அத்யாய:॥ 17 ॥
ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'ஷ்ரத்தாத்ரயவிபாக யோகம்' எனப் பெயர் படைத்த பதினேழாவது அத்தியாயம் நிறைவுற்றது.
தொடரும்....