பிரபுதேவா படத்தை தொடங்கி வைத்த பிரபல இயக்குனர்

Prabha Praneetha
4 years ago
பிரபுதேவா படத்தை தொடங்கி வைத்த பிரபல இயக்குனர்

இயக்குனர், நடன இயக்குனர் நடிகர் என பன்முகம் கொண்ட பிரபுதேவா நடிப்பில் அடுத்ததாக உருவாகும் படத்தை பிரபல இயக்குனர் கிளாப் அடித்து தொடங்கி வைத்திருக்கிறார்.

ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.அம்பேத்குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும்  திரைப்படம் 'ரேக்ளா'. பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை, 'வால்டர்' பட இயக்குனர் அன்பு இயக்குகிறார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

பிரபுதேவாவின் நடிப்பில் 58-வது படமாக உருவாகும் 'ரேக்ளா' படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

இவ்விழாவில் தயாரிப்பாளர்கள் ‘பைவ் ஸ்டார்’ கதிரேசன், சி.வி.குமார், ராக்ஃபோர்ட் முருகானந்தம், இயக்குநர்கள் மனோஜ், தாஸ் ராமசாமி மற்றும் கோபி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ‘ரேக்ளா’ படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் மிஷ்கின் கிளாப் அடித்து தொடங்கிவைத்தார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4