துப்பாக்கியால் சுடப்பட்டு பொலிஸ் அதிகாரி ஒருவர் தற்கொலை!

#SriLanka #GunShoot #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
52 minutes ago
துப்பாக்கியால் சுடப்பட்டு பொலிஸ் அதிகாரி ஒருவர் தற்கொலை!

வலன மத்திய அராஜகத் தடுப்புப் படையில் பணியாற்றி வந்த பொலிஸ் காவலர் ஒருவர் தனது பணி துப்பாக்கியின்மூலம் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இன்று அதிகாலை (29) காவல் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு அருகே அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

அவர் தனது டி-56 தாக்குதல் ரக துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். 

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் படுகாயமடைந்த அந்தக் காவலர், பாணந்துர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் பேராதனையைச் சேர்ந்த 28 வயதுடையவர் எனவும், மேலுதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4