உக்ரைன் அகதிகள் சென்ற பேருந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு

#Ukraine #Accident #Death
Prasu
2 years ago
உக்ரைன் அகதிகள் சென்ற பேருந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பால் உக்ரைன் மக்கள் கடும் பீதியில் உள்ளனர். அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றவண்ணம் உள்ளனர். இத்தாலிக்கு சுமார் 35 ஆயிரம் மக்கள் அகதிகளாக சென்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் ஸ்லோவேனியாவுடனான வடகிழக்கு எல்லை வழியாக இத்தாலிக்குள் நுழைந்துள்ளனர்.

இந்நிலையில், இத்தாலியில் இன்று 50 உக்ரைன் அகதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர்  உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர். மற்றவர்கள் காயமின்றி மீட்கப்பட்டுள்ளனர்.

உக்ரைனில் இருந்து புறப்பட்டு வந்த பேருந்து, அட்ரியாடிக் துறைமுக நகரமான பெஸ்காராவை நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாக இத்தாலி உள்துறை அமைச்சகம் கூறி உள்ளது. 

இந்த விபத்தைத் தொடர்ந்து அகதிகள் அனைவரும் அருகில் உள்ள காவல்துறை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு ஓய்வெடுத்தபின்னர் பயணத்தைத் தொடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!