இந்தியா உடனான தோல்வியை விமர்சித்த நபருக்கு பதிலடி கொடுத்த சுரங்க லக்மால்!

#Srilanka Cricket
Prasu
4 years ago
இந்தியா உடனான தோல்வியை விமர்சித்த நபருக்கு பதிலடி கொடுத்த சுரங்க லக்மால்!

இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கை அணி இன்று (17) காலை நாட்டை வந்தடைந்தது.

இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்திருந்தது.

இதன்போது விமான நிலைய பிரவேச முனையத்திற்கு வந்த ஒருவர் இலங்கை அணியின் தோல்வி குறித்து விமர்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருந்து தெரிவித்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால்,

"நபர் ஒருவர் கேள்வி ஒன்றை என்னிடம் கேட்டார். நான் அதற்கு பதில் கூறினேன். நான் நினைகிறேன் இது சாதாரண விடயம். போட்டியில் தோல்வியடையும் போது ஒரு விதத்திலும், வெற்றிப் பெறும் போது ஒரு விதத்திலும் பேசுவார்கள். வீரர்கள் என்ற வகையில் நாங்கள் அதை புரிந்துக் கொள்ள வேண்டும். குறித்த நபருக்கு நான் தௌிவு படுத்தி கூறினேன். அதன் பிறகு கோபம் ஏதும் இல்லை. அனைவரும் போட்டியில் வெற்றிப்பெறவே எதிர்ப்பார்கிறோம். வெற்றி தோல்வி இரண்டையும் ஏற்றுக் கொள்ள பழக வேண்டும். ரசிகர்களிடம் ஒன்றை வேண்டுகின்றேன். இதன் பின்னர் நாட்டுக்காக விளையாடப் போவதில்லை. சிறந்த ரசிகர்கள் எமக்கு உள்ளனர். அவர்கள் வீரர்களுக்கு ஆதரவளிப்பார்கள் என நம்புகிறேன்."

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4