மோட்ச சன்யாஸ யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை . தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 66.

#history #Article #Tamil People
மோட்ச சன்யாஸ யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை . தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 66.

பதினெட்டாவது அத்தியாயம் (மோட்ச சன்யாஸ யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை

ஷமோ தமஸ்தப: ஷௌசம் க்ஷாந்திரார்ஜவமேவ ச।
ஜ்ஞாநம் விஜ்ஞாநமாஸ்திக்யம் ப்ரஹ்மகர்ம ஸ்வபாவஜம்॥ 18.42 ॥

மனக்கட்டுப்பாடு, புலனடக்கம், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, கற்றறிவு, அனுபவ அறிவு, ஆன்ம நாட்டம் ஆகியவை இயல்பாக பிராமணனுக்கு உரியவை.

ஷௌர்யம் தேஜோ த்ருதிர்தாக்ஷ்யம் யுத்தே சாப்யபலாயநம்।
தாநமீஷ்வரபாவஷ்ச க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம்॥ 18.43 ॥

பராக்கிரமம், மன ஆற்றல், செயல்திறன், சாதுர்யம், போரில் புறம்கட்டமை, கொடை, ஆளும் திறமை ஆகியவை இயல்பாக க்ஷத்திரியனுக்கு உரிய செயல்கள்.

க்ருஷிகௌரக்ஷ்யவாணிஜ்யம் வைஷ்யகர்ம ஸ்வபாவஜம்।
பரிசர்யாத்மகம் கர்ம ஷூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம்॥ 18.44 ॥

விவசாயம், மாடுகளை காத்தல், வாணிபம் ஆகியவை இயல்பாக வைசியனுக்கு உரிய செயல்கள். சூத்திரனுக்கு இயல்பானது குற்றேவல் செயல்கள்.

ஸ்வே ஸ்வே கர்மண்யபிரத: ஸம்ஸித்திம் லபதே நர:।
ஸ்வகர்மநிரத: ஸித்திம் யதா விந்ததி தச்ச்ருணு॥ 18.45 ॥

தனக்குரிய கடமைகளில் இன்பம் காண்கின்ற மனிதன் நிறைநிலையை அடைகிறான். கடமையை செய்பவன் எப்படி நிறைநிலையை அடைகிறான் என்பதை கேள்.

யத: ப்ரவ்ருத்திர்பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்।
ஸ்வகர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ:॥ 18.46 ॥

யாரிலிருந்து உயிர்கள் தோன்றியுள்ளனவோ, யாரால் இந்த பிரபஞ்சம் எல்லாம் வியாப்பிக்கபட்டிருக்கிறதோ அவரை தனது கடமையால் அர்ச்சித்து, மனிதன் இறைநிலையை அடைகிறான்.

ஷ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்।
ஸ்வபாவநியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்॥ 18.47 ॥

மன இயல்பிற்கு ஏற்ற வேலை நிறைவானதாக இல்லாமல் போகலாம். பிறர் வேலை நிறைவுடன் செய்ய தக்கதாக இருக்கலாம். இருப்பினும் தனக்குரிய வேலையை செய்வதே சிறந்தது. சொந்த இயல்பிற்கு ஏற்ற செயலை செய்பவன் கேட்டை அடைவதில்லை.

ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோஷமபி ந த்யஜேத்।
ஸர்வாரம்பா ஹி தோஷேண தூமேநாக்நிரிவாவ்ருதா:॥ 18.48 ॥

குந்தியின் மகனே ! குறையுடன் கலந்ததாக இருந்தாலும் மன இயல்பிற்கேற்ப வேலையை விடக்கூடாது. ஏனெனில் நெருப்பு புகையால் சூழபட்டிருப்பது போல் எல்லா செயல்களும் குறையால் சூழப்பட்டுள்ளது.

அஸக்தபுத்தி: ஸர்வத்ர ஜிதாத்மா விகதஸ்ப்ருஹ:।
நைஷ்கர்ம்யஸித்திம் பரமாம் ஸம்ந்யாஸேநாதிகச்சதி॥ 18.49 ॥

( இயல்பிற்கேற்ற வேலையையும் ) முற்றிலும் பற்றற்று மனத்தை வசபடுத்தி, ஆசைகளை விட்டு செய்பவன் துறவின் மூலம் கிடைப்பதான செயலில் செயலின்மை காண்கின்ற மேலான நிலையை அடைகிறான்.

ஸித்திம் ப்ராப்தோ யதா ப்ரஹ்ம ததாப்நோதி நிபோத மே।
ஸமாஸேநைவ கௌந்தேய நிஷ்டா ஜ்ஞாநஸ்ய யா பரா॥ 18.50 ॥

குந்தியின் மகனே ! ( செயலில் செயலின்மை காண்கின்ற ) உயர் நிலையை அடைந்தவன் ஞானத்தின் மேலான முடிவாகிய இறைவனை எப்படி அடைகிறானோ அதை சுருக்கமாக கூறுகிறேன்.

புத்த்யா விஷுத்தயா யுக்தோ த்ருத்யாத்மாநம் நியம்ய ச।
ஷப்தாதீந்விஷயாம்ஸ்த்யக்த்வா ராகத்வேஷௌ வ்யுதஸ்ய ச॥ 18.51 ॥

விவிக்தஸேவீ லக்வாஷீ யதவாக்காயமாநஸ:।
த்யாநயோகபரோ நித்யம் வைராக்யம் ஸமுபாஷ்ரித:॥ 18.52 ॥

அஹம்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம்।
விமுச்ய நிர்மம: ஷாந்தோ ப்ரஹ்மபூயாய கல்பதே॥ 18.53 ॥

தூய புத்தியுடன், உறுதியாக தன்னை அடக்கி, ஒளி முதலான விஷயங்களை விட்டு, விருப்பு வெறுப்பை நீக்கி, தனிமையில் இருந்து, மிதமாக உண்டு, சொல் செயல் மனம் இவற்றை கட்டுபடுத்தி, எப்போதும் தியான யோகத்தில் திளைத்திருந்து காமம் கோபம் உடைமை இவற்றை விட்டு எனதென்பது இல்லாமல் சாந்தமாக இருப்பவன் சமகாட்சி நிலையை அடைவதற்கு தகுதி உடையவன்.

ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா ந ஷோசதி ந காங்க்ஷதி।
ஸம: ஸர்வேஷு பூதேஷு மத்பக்திம் லபதே பராம்॥ 18.54 ॥

சமகாட்சி நிலையில் உறுதிபெற்ற, தெளிந்த மனம் உடைய அவன் கவலைபடுவதில்லை, ஆசை கொள்வதில்லை. எல்லா உயிர்களிடமும் சமமாக இருக்கின்ற அவன் என் மீது உயர்ந்த பக்தியை அடைகிறான்.

பக்த்யா மாமபிஜாநாதி யாவாந்யஷ்சாஸ்மி தத்த்வத:।
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஷதே ததநம்தரம்॥ 18.55 ॥

நான் யார், எப்படிபட்டவன் என்பதை உள்ளது உள்ளபடி பக்தியால் அவன் அறிகிறான். அவ்வாறு என்னை உள்ளபடி அறிந்த பிறகு விரைவில் என்னை அடைகிறான்.

ஸர்வகர்மாண்யபி ஸதா குர்வாணோ மத்வ்யபாஷ்ரய:।
மத்ப்ரஸாதாதவாப்நோதி ஷாஷ்வதம் பதமவ்யயம்॥ 18.56 ॥

எப்போதும் என்னை சரணடைந்து, எல்லா வேலைகளையும் செய்பவன் நிலையான குறையற்ற நிலையை எனதருளால் அடைகிறான்.

சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸம்ந்யஸ்ய மத்பர:।
புத்தியோகமுபாஷ்ரித்ய மச்சித்த: ஸததம் பவ॥ 18.57 ॥

எல்லா வேலைகளையும் மனத்தால் என்னிடம் வைத்து, என்னையே கதியாக கொண்டு, புத்தி யோகத்தின் மூலம் எப்போதும் என்னில் நிலைபெற்றவனாக ஆவாய்.

மச்சித்த: ஸர்வதுர்காணி மத்ப்ரஸாதாத்தரிஷ்யஸி।
அத சேத்த்வமஹம்காராந்ந ஷ்ரோஷ்யஸி விநங்க்ஷ்யஸி॥ 18.58 ॥

என்னில் மனத்தை வைத்தால் எல்லா தடைகளையும் எனதருளால் தாண்டி செல்வாய். மாறாக அகங்காரத்தின் காரணமாக என் பேச்சை கேட்காவிட்டால் அழிவாய்.

யதஹம்காரமாஷ்ரித்ய ந யோத்ஸ்ய இதி மந்யஸே।
மித்யைஷ வ்யவஸாயஸ்தே ப்ரக்ருதிஸ்த்வாம் நியோக்ஷ்யதி॥ 18.59 ॥

அகங்காரத்தின் வசப்பட்டு, போர் செய்ய மாட்டேன் என்று நினைத்தால் உனது அந்த முடிவு வீணானது. உன் மன இயல்பே உன்னை போரில் ஈடுபடுத்தி விடும்.

ஸ்வபாவஜேந கௌந்தேய நிபத்த: ஸ்வேந கர்மணா।
கர்தும் நேச்சஸி யந்மோஹாத்கரிஷ்யஸ்யவஷோபி தத்॥ 18.60 ॥

குந்தியின் மகனே ! எதை செய்வதற்கு மனகுழப்பத்தின் காரணமாக தயங்குகிறாயோ, அதையே மன இயல்பின் காரணமாக தோன்றிய வினைபயனால் கட்டுண்டு, தன்வசம் இல்லாமல் செய்வாய்.

ஈஷ்வர: ஸர்வபூதாநாம் ஹ்ருத்தேஷே அர்ஜுன திஷ்டதி।
ப்ராமயந்ஸர்வபூதாநி யந்த்ராரூடாநி மாயயா॥ 18.61 ॥

அர்ஜுனா ! இறைவன் எல்லா உயிர்களின் இதயத்தில் இருக்கிறார். எல்லா உயிர்களையும் தனது சக்தியால் எந்திரத்தில் சுழற்றுவது போல் ஆட்டி வைக்கிறார்.

தமேவ ஷரணம் கச்ச ஸர்வபாவேந பாரத।
தத்ப்ரஸாதாத்பராம் ஷாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி ஷாஷ்வதம்॥ 18.62 ॥

அர்ஜுனா ! இறைவனையே எல்லா விதத்திலும் சரணடை. அவரது அருளால் மேலான அமைதியையும் அழிவற்ற நிலையையும் அடைவாய்.

இதி தே ஜ்ஞாநமாக்யாதம் குஹ்யாத்குஹ்யதரம் மயா।
விம்ருஷ்யைததஷேஷேண யதேச்சஸி ததா குரு॥ 18.63 ॥

ரகசியங்களுள் மேலான ரகசியத்தை இவ்வாறு நான் உனக்கு சொன்னேன். இதை நன்றாக ஆராய்ந்து எப்படி விரும்புகிறாயோ அப்படி செய்.

ஸர்வகுஹ்யதமம் பூய: ஷ்ருணு மே பரமம் வச:।
இஷ்டோ அஸி மே த்ருடமிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம்॥ 18.64 ॥

அனைத்திலும் ரகசியமான எனது மேலான அறிவுரையை மீண்டும் கேள். எனது உற்ற நண்பனாக இருக்கிறாய் அதனால் உனக்கு நல்லதை சொல்கிறேன்.

மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு।
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோ அஸி மே॥ 18.65 ॥

என்னிடம் மனத்தை வை. என் பக்தனாக இரு. என்னை வழிபாடு, என்னை வணங்கு, என்னையே அடைவாய். உனக்கு சத்தியம் செய்து இதனை உறுதி கூறுகிறேன். எனக்கு உகந்தவன் நீ.

ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஷரணம் வ்ரஜ।
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷ்யயிஷ்யாமி மா ஷுச:॥ 18.66 ॥

எல்லா கர்மங்களையும் அறவே விட்டு என்னை மட்டுமே சரணடை. நான் உன்னை எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன் வருந்தாதே.

இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந।
ந சாஷுஷ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோ அப்யஸூயதி॥ 18.67 ॥

தவமில்லாதவன், பக்தி இல்லாதவன், சேவை செய்யாதவன், என்னை நிந்திப்பவன் – இவர்களுக்கு ஒரு போதும் நீ இந்த கீதா உபதேசத்தை சொல்ல கூடாது.

ய இதம் பரமம் குஹ்யம் மத்பக்தேஷ்வபிதாஸ்யதி।
பக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்ஷய:॥ 18.68 ॥

யார் இந்த மேலான ரகசியத்தை என் பக்தர்களுக்கு சொல்கிறானோ, என்னிடம் மேலான பக்தி கொள்கிறானோ அவன் சந்தேகமில்லாமல் என்னையே அடைகிறான்.

ந ச தஸ்மாந்மநுஷ்யேஷு கஷ்சிந்மே ப்ரியக்ருத்தம:।
பவிதா ந ச மே தஸ்மாதந்ய: ப்ரியதரோ புவி॥ 18.69 ॥

மனிதர்களுள் எனக்கு மிகவும் பிரியமானதை செய்பவனும் மிகவும் பிரியமானவனும் அவனை விட வேறு யாரும் இல்லை. இருக்கவும் மாட்டான்.

அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் ஸம்வாதமாவயோ:।
ஜ்ஞாநயஜ்ஞேந தேநாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி:॥ 18.70 ॥

தர்மபரமான இந்த நமது உரையாடலை யார் படிக்கிறானோ அவன் என்னை அறிவு வேள்வியால் வழிப்பட்டவன் ஆவான். இது எனது கருத்து.

ஷ்ரத்தாவாநநஸூயஷ்ச ஷ்ருணுயாதபி யோ நர:।
ஸோ அபி முக்த: ஷுபாம்ல்லோகாந்ப்ராப்நுயாத்புண்யகர்மணாம்॥ 18.71 ॥

இதனை அவமதிக்காமல், செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கையோடு ஒருவன் கேட்டால் அவனும் முக்தனாகி புண்ணியம் செய்தவர்கள் அடைகின்ற நல்லுலகங்களை அடைவான்.

கச்சிதேதச்ச்ருதம் பார்த த்வயைகாக்ரேண சேதஸா।
கச்சிதஜ்ஞாநஸம்மோஹ: ப்ரநஷ்டஸ்தே தநம்ஜய॥ 18.72 ॥

அர்ஜுனா ! இதனை நீ ஒருமுகப்பட்ட மனத்துடன் கேட்டாயா ? தனஞ்சயா ! அறியாமையிலிருந்து தோன்றியதான உனது மனக்குழப்பம் தெளிந்ததா ?

அர்ஜுன உவாச।
நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்தா த்வத்ப்ரஸாதாந்மயா அச்யுத।
ஸ்திதோ அஸ்மி கதஸம்தேஹ: கரிஷ்யே வசநம் தவ॥ 18.73 ॥

அர்ஜுனன் கூறினான்: கிருஷ்ணா ! உனதருளால் என் மனமயக்கம் ஒழிந்தது. சுயநினைவு வந்தது. சந்தேகங்கள் விலகின . என் மனம் உறுதி பெற்று விட்டது. உனது சொற்படியே செய்கிறேன்.

இத்யஹம் வாஸுதேவஸ்ய பார்தஸ்ய ச மஹாத்மந:।
ஸம்வாதமிமமஷ்ரௌஷமத்புதம் ரோமஹர்ஷணம்॥ 18.74 ॥

சஞ்ஜயன் கூறினார்: இவ்வாறு கிருஷ்ணருக்கும் சிறந்தவனாகிய அர்ஜுனனுக்கும் நடைபெற்றதும் மயிர்கூச்செரிவதும் அற்புதமானதுமான உரையாடலை நான் கேட்டேன்.

வ்யாஸப்ரஸாதாச்ச்ருதவாநேதத்குஹ்யமஹம் பரம்।
யோகம் யோகேஷ்வராத்க்ருஷ்ணாத்ஸாக்ஷாத்கதயத: ஸ்வயம்॥ 18.75 ॥

இந்த மேலான சிறந்த யோகத்தை யோகேசுவரனாகிய கிருஷ்ணர் தாமே சொல்வதை வியாசரின் அருளால் நான் நேரடியாக கேட்டேன்

ராஜந்ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ஸம்வாதமிமமத்புதம்।
கேஷவார்ஜுநயோ: புண்யம் ஹ்ருஷ்யாமி ச முஹுர்முஹு:॥ 18.76 ॥

மன்னா ! கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த இந்த புண்ணியமான அற்புதமான உரையாடலை நினைத்து நினைத்து மீண்டும் மீண்டும் மகிழ்கிறேன்.

தச்ச ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ரூபமத்யத்புதம் ஹரே:।
விஸ்மயோ மே மஹாந்ராஜந்ஹ்ருஷ்யாமி ச புந: புந:॥ 18.77 ॥

மன்னா ! ஹரியின் அந்த அற்புத வடிவத்தை எண்ணியெண்ணி எனக்கு பெரும் வியப்பு உண்டாகிறது. நான் மேலும் மேலும் களிப்படைகிறேன்.

யத்ர யோகேஷ்வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ தநுர்தர:।
தத்ர ஷ்ரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மதிர்மம॥ 18.78 ॥

யோகேசுவரனாகிய கிருஷ்ணரும் வில்லை தாங்கிய அர்ஜுனனும் எங்கே உள்ளார்களோ அங்கே செல்வமும் வெற்றியும் வளமும் நீதியும் நிலைத்திருக்கும். இது எனது கருத்து.

ஓம் தத்ஸதிதி ஷ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஷ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
மோக்ஷஸம்ந்யாஸயோகோ நாம அஷ்டாதஷோ அத்யாய:॥ 18 ॥

ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'மோட்ச சன்யாஸ யோகம்' எனப் பெயர் படைத்த பதினெட்டாவது அத்தியாயம் நிறைவுற்றது.

ஓம்
ஷாம்தாகாரம் புஜகஷயநம் பத்மநாபம் ஸுரேஷம்।
விஷ்வாதாரம் ககநஸத்ருஷம் மேகவர்ணம் ஷுபாம்கம்।
லக்ஷ்மீகாம்தம் கமலநயநம் யோகீபிர்த்யாநகம்யம்।
வம்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைகநாதம்॥

முற்றும்.